இரு சக்கர வாகனங்கள் மோதியதில் 4 பேர் படுகாயம்
சிவகாசி, டிச.14- சிவகாசி அருகே இரு சக்கர வாக னங்கள் மோதி விபத்துக்குள்ளானதில் 4 பேர் படுகாயம் அடைந்தனர். சிவகாசி அருகே உள்ள முனீஸ் நகரைச் சேர்ந்தவர் வீரபொம்மு (22). இவர் சிவகங்கை சட்டக் கல்லூரியில் படித்து வருகிறார். இவர், பராசக்தி காலனியை சேர்ந்த பாண்டியன் மகள் கார்த்திகா (26) என்பவருடன் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். சிவகாசி-விருதுநகர் சாலையில் சென்ற போது, அவ்வழியே வந்த இராதாகிருஷ்ணன் காலனியைச் சேர்ந்த கருத்தப்பாண்டியின் இரு சக்கர வாகனம், வீரபொம்மு வாகனத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் வீரபொம்மு, கார்த்திகா, கருத்தப்பாண்டி மற்றும் அவரது மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து வந்த சிவகார்த்திக் ஆகிய 4 பேரும் படுகாயம் அடைந்தனர். விரைந்து வந்த அக்கம் பக்கத்தினர், 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து சிவ காசி நகர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேன் மோதி மூதாட்டி பலி
தூத்துக்குடி:வேன் மோதியதில் சாலையில் நடந்து சென்ற 71 வயது மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார்.தூத்துக்குடி முத்தையாபுரம், சூசை நகரைச் சேர்ந்தவர் யோக்கோபு மனைவி பாப்பா (71). இவர் திங்களன்று அப்பகுதியில் சாலையில் நடந்து சென்றபோது வேகமாக வந்த வேன் அவர் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரி ழந்தார். இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடக்கிறது.