tamilnadu

img

மதுரையை கலக்கும் கலைக்குழுக்கள்

மதுரையில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குகூட்டணியின் சார்பில் நாடாளுமன்றவேட்பாளர் சு.வெங்கடேசனை ஆதரித்து கடந்த இரண்டு வாரங்களாக கலைக்குழுக்களின் பிரச்சாரம் மதுரை மக்களிடையே அமோக வரவேற்பை பெற்றுள்ளது. கலைவாணர் கலைக்குழு, புதுகை பூபாளம் கலைக்குழு, சக்திகலைக்குழு, சாரல் கலைக்குழு, முரசு கலைக்குழு, சப்தர்ஹஸ்மி இவர்களோடு இணைந்து புயல்கலைக்குழு என கலைக்குழுக் களின் பிரச்சாரம் மதுரை நாடாளுமன்ற தொகுதி முழுக்க களைக் கட்டி உள்ளது. முத்தமிழினை சங்கம் வைத்து வளர்த்த மதுரை மாநகரில் எப்பொழுதும் இயல், இசை, நாடகம் என மூன்றுகலைகளும் திகட்டாமல் எப்பொழுதும் மக்களுக்கு கிடைத்துக் கொண்டே இருக்கும். மார்க்சிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சு. வெங்கடேசன் எழுத்தாளர், சாகித்ய அகாடமி விருது பெற்றவர். அவருக்கு இத்தனை கலைக்குழுக்களும் இணைந்து எண்ணற்ற வடிவில் மக்களை கவரும் வண்ணம்கிராமங்கள், நகரங்கள் என நீக்கமறபிரச்சாரம் செய்து வருவது மதுரைமக்களிடையே ஈர்ப்பினை ஏற்படுத்திஉள்ளது.  


புதுகை பூபாளம் கலைக்குழு


நையாண்டி தர்பார் என்கின்ற வடிவத்தில் கடந்த சில பத்தாண்டுகளாகதமிழகத்தையே கலக்கிவரும் புதுகை பூபாளம் கலைக்குழு மதுரையில் மையம் கொண்டு கலைவடிவத்தில் வெங்கடேசனுக்கு வாக்குசேகரித்து வருகிறது. ஒவ்வொருநிகழ்ச்சியிலும் அன்றாடும் நடைபெறும் அரசியல் நிகழ்வுகளையும், நையாண்டியோடு இணைத்து மக்களுக்கு எளிதில் புரியும் வண்ணம் தருவது அவர்களின் சிறப்பு. பாஜக ஐந்தாண்டுகள் கடைப்பிடித்த நாசகர பொருளாதார கொள்கைகள், மதசார்பு தன்மை, சிறுபான்மை விரோத, தலித் விரோத நடவடிக்கைகள் என அனைத்துச் செய்திகளையும் மதுரை மக்களின் மனதில் கொண்டு சேர்த்தது இக்கலைக் குழுவின் சிறப்பு.


கலைவாணர் கலைக்குழு


போக்குவரத்து தொழிலாளர் களின் குடும்ப உறுப்பினர்களை உள்ளடக்கிய கலைக்குழு தங்களது எதார்த்தமான நடிப்பின் மூலம்பிரச்சாரம் செய்யும் இடங்களில் ஆங்காங்கே நிற்கும் ஆண்கள், பெண்கள், இளையோர், முதியோர்என அனைத்துப் பிரிவினரும் உன் னிப்பாக கவனிக்க தொடங்கினர். விவசாய தற்கொலை, நீட் அனிதாதற்கொலை, ஜி.எஸ்.டி., பணமதிப்பீட்டு இலக்க நடவடிக்கையினால் ஏற்பட்ட இறப்பு என பல் வேறு அம்சங்களை உள்ளடக்கிய நாடகத்தை பார்த்த அனைவரும் கலங்கி நின்றதை பார்க்க முடிந் தது. நாடகம் முடிந்து மக்கள் கலைந்து செல்லும்போது ‘‘இந்த படுபாவிகள் மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது’’ என்று உரக்கச் சொல்லி சென்றதை காண முடிந் தது.  


சக்தி கலைக்குழு


முழுக்க முழுக்க பெண்களாலேயே நடத்தப்படும் கலை நிகழ்ச்சிகள். தப்பாட்டம், நிகழ் கலை என பல்வேறு உத்திகளின் மூலமாக மதுரை நாடாளுமன்ற தொகுதியின் பட்டித்தொட்டிகளில் எல்லாம்சென்று மக்களின் மனதினில் மோடிஎதிர்ப்பு உணர்வினை பசு மரத்தாணி போல ஓங்கி அறைந்துள்ள கலை நிகழ்ச்சியாகும்.  


முரசு கலைக்குழு


தலைவர்கள் பிரச்சாரம் செய்யும்இடங்களில் முரசு கலைக்குழுவினரின் பாடல்களும், உரைவீச்சும் அப்பகுதி மக்களை கவர்ந்து இழுப்பதற்கு பெருதவியாக இருக்கிறது. முரசு கலைக்குழுவினரின் காந்தக்குரல்களால் மக்கள் மலரினை தேடிச்செல்லும் தேனீக்களைப்போல வந்து குவிகின்றனர். மக்களின் மத்தியில் முரசு கலைக்குழுவின் உரைவீச்சு சிறப்பு.


சப்தர்ஹஸ்மி கலைக்குழு


புதுகை பூபாளம் கலைக்குழு போல தங்களுக்கென்ற தனித்த பாணியில் நையாண்டி தர்பார். சமீபத்திய பொருளாதார கலாச்சார, மக்கள் ஒற்றுமை சீர்கேட்டினைநல்லதொரு தொகுப்பாக சப்தர் ஹஸ்மி கலைக்குழுவினர் மக்களிடையே கொண்டு செல்கின்றனர். கணீரென குரல்களில் பாடல்கள் இந்தக் கலைக்குழுவினரின் மகுடம். தவில் வித்வானின் கைவிரல்கள்நர்த்தனமாடுகின்றன.  


சாரல் கலைக்குழு


சாரல் கலைக்குழுவினரின் நையாண்டி தர்பார் மிகவும் நைச்சியமாக இருக்கிறதென்று மதுரை மக்களின் கணிப்பு. அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் தகிடு தத்தங்களை தங்களின் நையாண்டி மூலமாக மக்களின் மனதில் எளிமையாக வைத்திருக்கின்றனர். இடையிடையே தப்பாட்டமும் பாடல்களும் அவர்களின் நையாண்டி தர்பாருக்கு கூடுதல் பலம் சேர்த்து கொண்டு இருக்கின்றன.


புயல் கலைக் குழு


புயல் கலைக்குழு 7 பேர்கொண்ட கலைக்குழு - தப்பாட் டம், ஒயிலாட்டம், நையாண்டி தர்பார்,பாடல்கள் என பன்முகத் தன்மையில்மதுரை தொகுதி முழுவதும் கலக்கிக் கொண்டிருக்கிறது. புயல்கலைக்குழு ஒயிலாட்டத்தை காண்பவர்கள் அப்படியே அசந்து நிற்கிறார்கள். இடையிடையே வேட்பாளர் குறித்த, கூட்டணி குறித்த தகவல் களோடு நையாண்டி தர்பார். கலைக்குழுக்கள் நிகழ்ச்சியினை முடித்துவிட்டு சென்ற போதும் கலையாத கூட்டங்கள். கூட்டங்களிடையே ஊடாடி வரும்போது ‘‘வெங்கடேசனுக்கே ஓட்டு போடுவோம் இந்த வட்டம்’’ என்ற சாமானியர்களின் குரல்களை கேட்காமல் இருக்க முடியாது.


வெ.ராகுல்ஜி;