கடந்த 3 ஆண்டுகளில் ஆஸ்திரேலியாவிலுள்ள காவ்லா என்ற விலங்குகளின் எண்ணிக்கை 30 விழுக்காடு குறைந்துள்ளது.
உயர்திணையில் உயர்ந்து நில்
கல்லை இடித்தது கால்
கல் இடித்தததாய்
கல் மீது குற்றம் சொல்கிறோம்
முள் மீது கால் வைத்துவிட்டு
முள் குத்தியதாய்
முள்ளைக் குற்றவாளியாக்குகிறோம்
செருப்பின் தயாரிப்புக் குறையால்
செருப்புக் கடித்ததென
செருப்பைக் குற்றம் சாட்டுகிறோம்
பேருந்தைத் தவறவிட்டு
பேருந்து தவறிவிட்டதாகக்
குறை சொல்கிறோம்
உயர்திணை புரிந்த தவறுகளுக்கு
அஃறிணைகளைக்
குற்றவாளிகளாக்குவதே
உயர்திணையின் வாடிக்கை வழக்கமானது
குற்றத்தை ஏற்பவர்
குறையை ஒத்துக்கொள்பவர்
மாமனிதர் ஆகிறார்
பெரணமல்லூர் சேகரன்