சென்னை,
திமுக தலைமையிலான கூட்டணியில் மதுரை மற்றும் கோவை தொகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிட உள்ளது. இந்நிலையில் இன்று 3 மணியளவில் தியாகராய நகரில் உள்ள கட்சியின் மாநிலக்குழு அலுவலகத்தில் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்தார்.
கோவையில் முன்னாள் நாடாளு மன்ற உறுப்பினர் பி.ஆர் நடராஜனும், மதுரையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலப்பொதுச்செயலாளர் சு.வெங்கடேசனும் போட்டியிட உள்ளனர் என்று தெரிவித்தார்.