tamilnadu

img

பாரதியின் கருத்துக்களை முன்னெடுத்துச் செல்வோம்

மதுரை, டிச.11- மகாகவி பாரதியார் 140 ஆவது பிறந்த தினம் சனிக்கிழமை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார் பில் மதுரையில் கடைப் பிடிக்கப்பட்டது. பாரதியார் பணியாற்றிய மதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் உள்ள அவரது உருவச்சிலைக்கு அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.இராமகிருஷ்ணன் மாலை அணிவித்து அஞ்சலி செலுத் தினார். நிகழ்வில் பேசிய ஜி. இராமகிருஷ்ணன், “பாரதி யார் இந்தியாவைக் கடந்தும் உலகம் முழுவதும் கொண் டாடக்கூடிய ஒரு கவிஞர். பாரதி கவிதை எழுதியதோடு நின்றுவிடவில்லை. அந்தக் கவிதைகளை நனவாக்கும் விதமாக சுதந்திரப் போராட் டத்தில் ஈடுபட்டவர்.

அவர் சமூக சீர்திருத்தவாதி. “சாதி கள் இல்லையடி பாப்பா” என்று பாடிய பாரதிக்கு சாதிச் சாயம், மதச் சாயம் பூசக் கூடாது. பெண்ணடிமைத் தனத்திற்கு எதிராகவும். மூட நம்பிக்கைகளுக்கு எதி ராகவும் குரல் கொடுத்தவர். நாடு இன்றுள்ள சூழலில், பாரதியின் பாடல்களை, கருத்துக்களை முன்னெப் போதைக் காட்டிலும் கூடு தல் முனைப்போடு முன்னெ டுத்துச் செல்ல வேண்டு மென்றார்” நிகழ்வில் மாநிலக்குழு உறுப்பினர்கள் இரா.விஜய ராஜன், க.சுவாமிநாதன், மாவட்டச் செயற்குழு உறுப் பினர்கள் அ.ரமேஷ், ஜா.நர சிம்மன், அ.கோவிந்தராஜன், ஆர்.சசிகலா, டி.செல்வராஜ், மாவட்டக்குழு உறுப்பி னர்கள் கா.இளங்கோவன், எஸ்.வேல்தேவா, மத்திய 2-ஆம் பகுதிக்குழுச் செயலா ளர் பி.ஜீவா, தமிழ்நடு முற் போக்கு எழுத்தாளர்கள்-கலைஞர்கள் சங்கம் சார்பில் மாவட்டத் தலைவர் ஸ்ரீரசா, சாந்தாராம், சோழ.நாக ராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

;