சென்னை, அக்.8- சென்னையில் எப்படிப்பட்ட மழை வந்தாலும் சமாளித்துவிடலாம் என மழை நீர் வடிகால் பணிகளை ஆய்வு செய்த பின் முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் தெரிவித்துள்ளார். வடகிழக்கு பருவமழைக்கான அறி குறிகள் தொடங்கிவிட்டன. வரும் 15ஆம் தேதிக்கு மேல் பருவமழை தொடங்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே பருவ மழையின்போது சென்னை நகரம் வெள்ளத்தில் சிக்கி திணறுகிறது. சென்னையை பொறுத்த வரை 30 பிரதான கால்வாய்கள் உள்ளன. 2 ஆயிரம் கிலோ மீட்டருக்கு மேல் உள்ள மழைநீர் வடிகால்வாய்கள் வழி யாக மழைநீர் ஓடி பிரதான கால் வாய்களில் கலந்து வெளியேற வேண் டும். ஆனால், ஆக்கிரமிப்புகள், தூர்ந்து போதல், மழைநீர் கால்வாய கள் இல்லாமை, இணைப்பு இல் லாமை போன்ற காரணங்களால் மழை நீர் தேங்கி நகரில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்துகிறது. வடகிழக்கு பருவமழை நெருங்கி வருவதால் சென்னையில் மழைநீர் வடிகால்கள் பணிகள் வேகமாக நடை பெற்று வருகிறது. பெரும்பாலான இடங்களில் மழைநீர் கால்வாய்கள் கட்டி முடிக்கப்பட்டு உள்ளன.
அதே நேரம் கால்வாய்களை ஒன்றுடன் ஒன்று இணைக்கும் பணிகள் இன்னும் முழுமை அடையவில்லை. பல தெருக்களிலும், பிரதான சாலைகளி லும், கால்வாய்கள் கட்டி முடிக்காமல் அரைகுறையாக காட்சியளிக்கின்றன. இந்நிலையில் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சனிக் கிழமை நேரில் சென்று ஆய்வு செய் தார். மண்டலம் 5க்கு உட்பட்ட என். எஸ்.சி. போஸ் சாலை, சென்ட்ரல் ஸ்டே சன், வால்டாக்ஸ் சாலை, பேசின் பாலம் சந்திப்பு ஆகிய பகுதிகளில் அவர் ஆய்வு செய்தார். பின்னர் மண்டலம் 6க்கு உட்பட்ட புளியந்தோப்பு நெடுஞ்சாலை, டிமெ லொஸ் சாலை, டாக்டர் அம்பேத்கர் கல்லூரி சாலை, கொளத்தூர் வேல வன் நகர், கொளத்தூர் கோயில் தெரு உள்ளிட்ட பகுதிகளிலும் ஆய்வு செய்து பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட் டறிந்தார். பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் செய்தியாளர்களிடம் கூறுகை யில், “மழை அவ்வவ்போது பெய்து வருவதால் வேலைகள் தடைபட் டுள்ளது” என்றார். குறைந்தபட்சம் 15 நாள், அதிக பட்சம் ஒரு மாதத்திற்குள் பணிகள் முடி வடையும் என்றும் அவர் தெரிவித்தார். மழைநீர் வடிகால் பணிகளில் திருப்தி ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், எப்படிப்பட்ட மழை வந்தாலும் சமாளிக்கும் வகையில் பணிகள் உள் ளதாகவும் முதலமைச்சர் கூறினார். இந்த ஆய்வின் போது அமைச்சர் கள் கே.என்.நேரு, சேகர்பாபு, நாடா ளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், மாநகராட்சி மேயர் பிரியா, ஆணையா ளர் ககன்தீப்சிங் பேடி ஆகியோர் உடன் இருந்தனர்.