tamilnadu

img

சட்டமன்ற கூட்ட நாட்களை அதிகரிக்க வேண்டும்!

சென்னை, ஜூன் 14 - சட்டமன்றக் கூட்ட நாட்களை அதிகரிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பால கிருஷ்ணன் வலியுறுத்தி உள்ளார். மார்க்சிஸ்ட் கட்சியின் இரண்டு  நாள் மாநிலக்குழு கூட்டம் வெள்ளி யன்று (ஜூன் 14) சென்னையில் மாநி லச் செயற்குழு உறுப்பினர் க.  கனகராஜ் தலைமையில்  தொடங்கி யது. அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் பிரகாஷ் காரத், ஜி. ராமகிருஷ்ணன், மாநிலச் செய லாளர் கே. பாலகிருஷ்ணன், மத்தியக் குழு உறுப்பினர்கள் உ. வாசுகி, பி. சம்பத், பெ. சண்முகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதனையொட்டி மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் செய்தியாளர்களுக்குப் பேட்டி யளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

பாஜகவுக்கு அடி

நாடாளுமன்ற தேர்தல், அதில்  கிடைத்துள்ள வரலாறு காணாத வெற்றி ஆகியவற்றை ஆழ்ந்து விவாதிக்க உள்ளோம். தமிழ்நாட்டில் மேற்கொள்ள வேண்டிய அடுத்த கட்டப் பணி களை திட்டமிட்டு இருக்கிறோம். நாடாளுமன்ற தேர்தலில் மோடி அரசு எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. பாஜகவின் பலம் 303-லிருந்து 240 ஆகவும், கூட்டணி யின் பலம் 357-லிருந்து 293 ஆக வும் குறைந்துள்ளது. எனினும் மூன்றாவது முறையாக மோடி ஆட்சி பொறுப்பை ஏற்றுள்ளார். பாஜக ஆட்சியின் கொள்கை யில், அணுகுமுறையில் பெரிய மாற்றம் இருக்காது என்ற நிலை  உள்ளது. பதவியேற்பு முடிந்த மறு நாளே கூட்டணிக்குள் சச்சரவுகள் வந்துவிட்டது. பதவிக்காக சண்டை  போடும்- பதவி விலகும் நிலை தான்  ஏற்பட்டுள்ளது. பாஜக அதை பற்றி கவலைப்படாமல், சொந்த செயல் திட்டத்தை செயல்படுத்துவதில் முனைப்பு காட்டுகிறது.

‘ஜூன் 22’ போராட்டம்

றைகேடு நடந்துள்ளது. உச்ச நீதிமன்றம் தலையிட்டு, 1563 பேரின் கருணை மதிப்பெண்களை ரத்து செய்து மீண்டும் தேர்வு எழுத  உத்தரவிட்டுள்ளது. நீட் தேர்வுக்கு எதிராக பல மாநிலங்களில் பெற் றோர்கள், மாணவர்கள் போராடு கின்றனர். அதன்பிறகும், நீட் தேர்வை வேண்டுமா? வேண்டாமா? என்பதை முடிவு செய்யும் உரிமை யை மாநிலங்களுக்கு வழங்க மறுக்கின்றனர். ‘நீட்’ தேர்வு முறைகேடு பின்ன ணியில், கல்வியை மீண்டும் மாநி லப் பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையை மையப்படுத்தி போராட்டம் நடத்த  வேண்டியுள்ளது. இதனை வலி யுறுத்தி ஜூன் 22 அன்று தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெறு கிறது. கோவையில் ஜூன் 15 அன்று திமுக சார்பில் நடைபெறும் மக்கள வைத் தேர்தல் வெற்றி விழா - நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் பங்கேற்கிறோம். சட்டமன்றக் கூட்டம் சட்டமன்ற கூட்டத்தொடரில் மக்கள் சந்திக்கும் பிரச்சனைகளை சிபிஎம் உறுப்பினர்கள் எழுப்பு வார்கள். விக்கிரவாண்டி இடைத் தேர்தல் காரணமாக, சட்ட மன்ற கூட்டம் 9 நாட்கள் மட்டுமே நடைபெற உள்ளது. சட்ட மன்றத்தில் ஏராளமான பிரச்சனை களை விவாதிக்க வேண்டியுள்ளது. அலுவல் ஆய்வுக் கூட்டம் முடி வெடுத்த பிறகு, கூட்டத்தை நீட்டிக்க முடியுமா? என தெரிய வில்லை. இருப்பினும், பேரவைத் தலைவருக்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் முறையீட்டை தெரிவிக்க உள்ளோம்.

இவ்வாறு கே. பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

முன்னேற்றம்

மேலும், செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த கே.  பாலகிருஷ்ணன், “கடந்த தேர்தலை விட இடதுசாரிகளுக்கு சற்று முன் னேற்றம் ஏற்பட்டுள்ளது. சிபிஎம் உறுப்பினர்கள் எண்ணிக்கை 3- லிருந்து 4-ஆகவும், இடதுசாரிகளின் எண்ணிக்கை 5-லிருந்து 8 ஆகவும் உயர்ந்திருக்கிறது. இது போதுமானதல்ல. நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரசை ஆதரிப்பதும், மாநில ஆட்சி எனும்போது இடதுசாரி களை ஆதரிக்கும் போக்கு (டிரெண்ட்)  கேரளத்தில் உள்ளது. இருப்பி னும், ஒவ்வொரு மாநிலக்குழுவும் விவாதித்து அறிக்கை அளிப்பார்கள். ஜூன் மாதம் இறுதியில் நடைபெறும் மத்தியக் குழு கூட்டத்தில் முழுமையாக இதுபற்றி விவாதிக்கப்படும். இடதுசாரிகளின் சொந்த பலத்தை யும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பலத்தையும் பெருக்க கவனம் செலுத்துவோம். நிதிப் பகிர்வில் பாரபட்சம் பாஜக அரசு தனது அணுகு முறையை மாற்றிக் கொள்ள வில்லை என்பதற்கு நிதிப் பகிர்வில் பாரபட்சம் காட்டுவது ஒரு  உதாரணம். ஒரு ரூபாய் வரியில் 29 பைசா தருகிற உ.பி.க்கு ஒன்றிய அரசு 2.79 பைசாவை திருப்பி தருகிறது. 15வது நிதிக்குழு பரிந்துரையை ஒன்றிய அரசு ஏன் மாற்றக்கூடாது?  இதனால் தென்மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாக முதலமைச்சர்கள் எதிர்ப்பு தெரி வித்துள்ளனர். கேரள நிதியமைச்சர் தென்மாநில நிதியமைச்சர்கள் கூட்டத்தை நடத்தியுள்ளார். பழிவாங்கும் போக்கிலிருந்து பாஜக பின்வாங்கவில்லை என்பதையே தற்போதைய நிதி ஒதுக்கீடு காட்டுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

\


 

;