சென்னை, செப். 9- தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் சங்கங்களை உள்ள டக்கிய ஜாக்டோ- ஜியோவின் ஆசிரி யர், அரசு ஊழியர், அரசுப் பணியா ளர் வாழ்வாதார நம்பிக்கை மாநாடு சென்னை தீவுத்திடலில் சனிக்கிழமை (செப். 10) மாலை 3 மணிக்கு நடை பெற உள்ளது. இதுகுறித்து ஒருங்கிணைப்பா ளர்கள் சென்னையில் வெள்ளி யன்று (செப். 9) செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழக முதல்வர் ஜாக்டோ ஜியோ மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் பரப்புரையின் போது நியாயமான எங்களின் உரிமை களுக்காக அவர் குரல் கொடுத்ததை யும், திமுக ஆட்சிக்கு வந்தால் ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதாக உறுதி அளித்ததையும் யாரும் மறந்துவிட முடியாது. ஆனால் திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்றபோது இருந்த கடுமையான கொரோனா தொற்றுச் சூழலாலும், அரசுக்கு கடுமையான நிதி பற்றாக்குறை இருந்ததாலும் கோரிக் கைகள் தள்ளி வைக்கப்பட்டன. நிதி நிலைமை சரியானதும் அவற்றைப் படிப்படியாக நிறைவேற்றுவதாக உறுதி அளித்திருந்தார்.
அரசுக்கு உள்ள நிதி நெருக்கடி களை உணர்ந்து நாங்களும் பொறுமை காத்து வருகிறோம். கடந்த ஒன்றரை ஆண்டுகளில் அக விலைப்படியைத் தவிர வேறு எந்த கோரிக்கையும் நிறைவேற்றப் படவில்லை. முதல்வரும் கோரிக்கை கள் எதுவும் நிறைவேற்றப்பட வில்லை என்பதை உணர்ந்துள்ள நிலையில், அவர் ஜாக்டோ - ஜியோ மாநாட்டின் மூலம் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தும் அறி விப்பு உள்ளிட்ட சிலவற்றை அறி விப்பார் என்றும், பிற கோரிக்கை களை படிப்படியாக நிறைவேற்று வார் என்ற நம்பிக்கை எழுந்துள் ளது. இந்த மாநாட்டில் உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோரும் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளனர்.
மாநில ஒருங்கிணைப்பாளர்கள் ஆ.செல்வம், மு.அன் பரசு (தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம்), ஆ.ஆறுமுகம் (தமிழகத் தமிழாசிரியர் கழகம்), அ.மாயவன் (தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம்), ப.குமார் (தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கம்), செ.முத்துசாமி (தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி), ச.மயில் (தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி), இரா.தாஸ் (தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி), அ.வின்சென்ட் பால்ராஜ் (தமிழக ஆசிரியர் கூட்டணி), ஆர்.பெருமாள்சாமி (தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம்), காந்திராஜ் (கல்லூரி ஆசிரியர் கூட்டு நடவடிக்கை குழு), கு.தியாகராஜன் (தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்), சி.சேகர் (தமிழ்நாடு தொடக்க நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கம்), எஸ்.சங்கரப்பெருமாள் (தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் சங்கம்), கி.மகேந்திரன் (தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம்), பொன்.செல்வராஜ் (தமிழ்நாடு பதவி உயர்வு பெற்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்கம்) கு.வெங்கடேசன் (தலைமை செயலகம்) வி.எஸ்.முத்துராமசாமி (தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி), நா.சண்முகநாதன் (தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்), இலா.தியோடர் ராபின்சன் ஆகியோரும் பேசுகின்றனர். இந்த சிறப்பு மாநாட்டில் மாநிலம் முழுவதிலும் இருந்து ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பார்கள். இவ்வாறு அவர்கள் கூறினர். கலைநிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.