tamilnadu

img

மனிதகுல மாற்றத்தை பறைசாட்டும் குமிட்டிபதி குகை ஓவியம்

வலிய உருவத்தில் பெரிய விலங்  கான யானையை அடக்கி மனி தன் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த  ஓவியங்கள், மனித குல மாற்றத்தையும், ஆடை நாகரீக உலகத்தின் ஆரம்பத்தை யும், மரங்கள் இனக்குழு மனிதர்கள் இயற்  கையோடு கூடிய சுற்றுச்சூழல் வாழ்க்கை யையும் குமிட்டிபதி குகை ஓவியத்தில் வெளிப்படுகிறது. ஏற்கனவே இதுகுறித்த செய்திகள் வெளிவந்தபோதிலும், புதிய பார்வை, கோணத்துடன் தமிழ்நாடு மத்தியப்  பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் முனைவர் ச.ரவி ஆய்வு மேற் கொண்டு வருகிறார்.  கோவை மதுக்கரை அடுத்துள்ள மல சார் பழங்குடியின மக்கள் வாழும் குமிட்டிபதி, குகை ஓவியம் குறித்து பத்தாண்டுகளுக்கு மேலாக ஆய்வு மேற்கொண்ட பேராசிரியர் ரவி இக்குகை ஓவியங்கள் குறித்து தெரி விக்கையில், கோவைக்குத் தெற்கே பதி மலை என்று சொல்லப்படுகின்ற மலையின் மேற்குக்கீழ்ப்பகுதியில் பண்டைய கால மனிதர்கள் வாழ்ந்ததற்கான குகைத்தளம் கண்டறியப்பட்டிருக்கிறது. அதில் வெண்மை நிறத்தினால் பண்டைய கால மனி தர்கள் வரைந்த ஓவியங்கள் வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட தொல் இனக்குழு மனி தர்கள் வாழ்ந்ததற்கான வாழ்வியல் தட யங்கள் முக்கியமாகக் கருதப்படுகின்றன. 

இக்குகை ஓவியம் 3000 ஆண்டு பழமை  வாய்ந்ததாகக் கருதலாம். ஆனால் அதற்கும்  முன்பே நாடோடி இனக்குழு மனிதர்களின் வாழிடமாகவும் இக்குகைத்தளம் அமைந்தி ருக்கின்றது. இதில் வாழ்ந்த மக்கள் புராதன பொது வுடைமை நாடோடி இனக்குழு மக்க ளாக இருந்திருக்கின்றார். அவர்கள் மரபு வழி யில் வந்த இனக்குழுமக்கள் கடந்த 3000  ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த அவர்களின் ஓவியத்தை இக்குகையில் காணமுடிகிறது. குகையின் கிழக்குப் பாறைப்பகுதியில் வெண்நிறத்தில் சில ஓவியங்கள் வரையப் பட்டுள்ளன. முதல் ஓவியம் நேர் போன்ற ஒரு சப்பரத்தை இரு அணியினர் வடக்கு  நோக்கி இழுந்துச்செல்வதைக் காணமுடி கிறது. முதல் அணியில் 10 மனிதர்களும் இரண்டாவது இணை அணியில் 7 மனி தர்களும் காணப்படுகின்றனர். இது இனக்குழு பொதுஉடைமைச் சமுதாயத்தின் கூட்டுழைப்பைக் காட்டுகிறது. மனிதர்கள் அனைவரையும் எளிய சிறிய உருவில் காட்டப்பட்டிருக்கிறது.  சக்கரங்களுடன் கூடிய தேர்ச்சப்பரம் போன்று அலங்கரிக்கப்பட்ட நேர்போன்ற வடிவழகைக் காணமுடிகிறது. அதனை அடுத்து மரங்களின் மேல் யானை ஒன்று தெளிவாக வரையப்பட்டிருக்கின்றது. அந்த  யானையின் மீது ஒருவன் அமர்ந்து அங்குசத்தைக்கொண்டு யானையை அடக்குகின்ற காட்சியைக் காணலாம். யானை கோபத்துடன் இருப்பதை அதன் வால் மேல்நோக்கி இருப்பதின் மூலம் உணர முடிகிறது, தந்தங்களுக்கு இடையே வளைந்த துதிக்கையைக் காண முடிகிறது. மேல் அமர்ந்திருந்த மனிதன் கையில் ஆயு தத்தைக் கொண்டு (அங்குசம்) அடக்குகிற பணியில் ஈடுபட்டிருப்பதை உணர முடி கிறது.

யானை வணிகம் - வேலந்தாவளம்

பதிமலை பக்கத்தில் “வேலந்தாவளம்” என்ற ஊர் உள்ளது. ‘வேலம்’ என்றால் யானை என்று பொருள். தாவளம் என்றால்  ‘வணிகச் சந்தை’ என்று பொருள். யானை  வணிகம் நடைபெற்ற இடம் தான் ‘வேலந்தா வளம்’ என்ற ஊர்ப்பெயராகத் தோன்றி இருக்கிறது. இப்பகுதி சேரநாட்டு எல்லைப் பகுதியாக இருப்பதால் யானைகளைச் சேரநாட்டு மேற்குப்பகுதிகளில் இருந்து வர வழைக்கப்பட்டு இவ்விடத்தில் யானை வணிகம் நடைபெற்றிருக்க வேண்டும்.  பழங்குடி இனக்குழு தலைவர்களின் வளர்ச்சியாக சங்ககால வேந்தர் இனத் தோற்றத்தைக் காணமுடிகிறது. தமிழக மூவேந்தர்கள் காலத்தில் யானைப்படையே வலிமை மிக்கதாகப் பார்க்கப்பட்டது. கட்டுப்பாட்டிற்குள் உறுதிப்படுத்துகிறது. யானைகளை மனிதர்கள் தன் கொண்டுவந்த காலத்தை இக்குகை ஓவியம் அதன் கீழ்பாதத்தில் வேலைப்பாடுகளுடன் கூடிய வரையப்பட்டுள்ள இடத்தின் கீழ்  முழுமனிதனின் ஓடம் உருவம் போன்று நன்கு தீட்டப்பட்டுள்ளதைக் காண முடிகிறது  அவனது வலது கையில் தீப்பந்தம் அல்லது கேடயம் போன்ற ஒரு பொருளை ஏந்தியும் இடது கையில் நீளமான கூர் ஆயுதம் போன்ற  நீண்ட ஒரு பொருளும் ஆகிய இரண்டு  பொருள்களை ஏந்தியவனாகக் காணப்படு கின்றான். அவனது இடையில் கச்சை கட்டி  இருப்பது ஆடையைக் குறிப்பதாக உறுதிப்  படுகிறது. அவன் வலது புரம் நோக்கிச் செல்வ தைக் காணலாம். தேர்ச்சக்கரத்துடன் கூடிய சப்பரம் சக்க ரத்துடன் கூடிய படகு போன்ற பகுதிகள் முக்கி யக் காட்சிகளாகின்றன. சக்கரம் கண்டு பிடிக்கப்பட்டது மனித வாழ்வில் புரட்சிகர மான மாற்றம் என்பார்கள்.

குகைவாழ் இனக்குழு மக்களின் பொது  உடைமைச் சமுதாயத்தையும், வலிய விலங்காகிய யானையை மனிதன் தன் கட்டுப்  பாட்டிற்குள் கொண்டு வந்த காலகட்டத்தை யும், தேர்ச்சக்கரங்கள் குழு நடைப்பய ணத்தைச் சுருக்கி விரைவாகச் செல்வதற்கு ரிய மனித குல மாற்றத்தையும், ஆடை நாகரீக உலகத்தின் தொடக்கத்தையும், வரையப் பட்டுள்ள மரங்கள் இனக்குழு மனிதர்கள் இயற்கையோடு கூடிய சுற்றுச்சூழல் வாழ்க்கையையும் காணமுடிகிறது.  குகைவாழ் மனிதர்களின் இனக்குழு வாழ்க்கை கடுமையான விலங்குகளையும் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்த குழு மனிதர்களின் கடின உழைப்பு, இனக்குழு  சமுதாயத்தில் இருந்து நாகரிக சமுதா யத்தை நோக்கிப் பயணிக்கின்ற தேர்ச்சக்கர கண்டுபிடிப்பு, வேலைப்பாடுகளுடன் கூடிய தேர்ச்சப்பரம் போன்ற பகுதிகளின் வடிவ மைப்பு, ஆடை நாகரிக மனிதர்களின் வளர்ச்சி; அழியாத வெள்ளை வண்ணக் கண்டுபிடிப்பு. பழங்காலச் சமுதாயத்தை ஓவியத்தால் வரைந்து எதிர்காலச் சமு தாயத்திற்குத் தகவல் தொடர்பை ஏற்படுத் திய பழங்கால மனிதர்களின் ஆற்றலை இவ்வோவியங்கள் வெளிப்படுத்தி இருக்கின்றன. இக்குகையின் மேலே சென்றால் பாறை  இடுக்கில் இனக்குழு மனிதர்களின் ஏழு உரு வங்கள் வெள்ளை வண்ணத்தில் வரை யப்பட்டுள்ளதைக் காணமுடிகின்றன. பெரிய  உருவம் சின்ன உருவம் என வேறுபாட்டைக் காணமுடிகின்றன. பெரிய தலையுடன் கூடிய  பெரிய உருவம் அவரின் பின்னே சிறிய தலைகளுடன் கூடிய சிறிய உருவங்கள் சில  வரையப்பட்டுள்ளன.

இவை பெரிய உருவம் உடைய பெரிய  தலை உடைய மனிதன் அறிவிலும் ஆற்றலி லும் வளர்ச்சியடைந்த குழுத்தலைவனாகக் கொள்ள முடிகிறது. அவரின் பின்னே மனி தர்கள் இருக்கிறார்கள். இவர்களைக் கொடிய விலங்குகளிடமிருந்து, உணவைச் சேகரிக்க, வேட்டைக்கு வழிகாட்டக் கூடிய தலைவனாக இருப்பதைப் பெரிய தலை பெரிய உருவம் காட்டுகிறது. இவ்வோவியங்கள் குழு மனிதர்களை யும் குழுத் தலைவன் உருவானதையும் காட்டு கின்றன. பழங்காலச் சமூகத்தின் மகோன்ன தமான வளர்ச்சியைக் காட்டும் இவ்வோவி யங்களை அழியாமல் காப்பாற்றப்பட வேண்டும். அழிவின் விளிம்பில் இருக்கும் இவ்வோவியங்கள் முற்றிலும் அழிந்து போனால் பண்டைய சமூக மக்களின் வாழ்வி யல் வரலாற்றை நாம் அறிந்து கொள்ளா மலேயே போய்விடுவோம். பண்டைய சமுதாய வளர்ச்சி நிலையை அறிய உதவும் குமுட்டிப்பதி குகை ஓவி யத்தைப் பாதுகாப்பது அரசின் பணி என தெரிவித்தார்.
 

;