வரவேற்புக் குழுவில் 2001 பேர்
எர்ணாகுளத்தில் மார்ச் 1 முதல் 4 வரை நடைபெற உள்ள கேரள மாநில சிபிஎம் மாநாட்டுக்கு 2001 பேர் கொண்ட வரவேற்புக்குழு அமைக் கப்பட்டது. தலைவராக தொழில்துறை அமைச்சர் பி.ராஜீவ் தேர்வு செய்யப்பட்டார். 601 பேர் கொண்ட நிர்வாக குழுவும், 14 துணை குழுக் களும் தேர்வு செய்யப்பட்டன. மத்தியக்குழு உறுப்பினர் ஏ.விஜயராக வன், எம்.சி.ஜோசபைன், மாவட்ட செயலாளர் சி.என்.மோகனன், மேயர் அனில் குமார் உள்ளிட்டோர் பேசினர்.
கொச்சி, டிச.9- கேரளாவை அறிவியல் மற்றும் வரலாற்று அறிவு சமூகமாக வைத்தி ருக்க விரிவான முயற்சிகளை மேற் கொள்வதில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி முன்னிலை வகிக்கும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் கேரள மாநில செயலாளர் கொடி யேரி பாலகிருஷ்ணன் தெரிவித்தார். இதற்கான நடவடிக்கைகளை மாநில மாநாடு வகுக்கும் என்றார். எர்ணாகுளத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில மாநாட்டின் வரவேற்புக் குழு அமைப்புக் கூட் டத்தை புதனன்று (டிச.8) தொடங்கி வைத்து அவர் மேலும் பேசியதா வது: மதச்சார்பற்ற அடித்தளத்தையும் மறுமலர்ச்சி விழுமியங்களையும் தகர்த்து கேரளத்தை வலதுசாரி பாதைக்கு மாற்றும் திட்டமிட்ட முயற்சிகள் நடந்து வருகின்றன. சமூ கம் தனது அறிவியல் விழிப்புணர்வை யும் வரலாறு குறித்த விழிப்புணர்வை யும் இழந்தால் மத அடிப்படைவாதி களும் வகுப்புவாத சக்திகளும் எளி தில் ஊடுருவ முடியும். அறிவியல் உணர்வுள்ள சமுதாயத்தை பராம ரிக்கும் பணியை, எழுத்தறிவு இயக் கும் போல் மக்கள் இயக்கமாக்கிட வேண்டும்.
இதற்கு சிபிஎம் தலைமை தாங்கும். கேரளத்தின் வளர்ச்சியைத் தடுக்கும் பிரச்சாரம் நடந்து வரு கிறது. யுடிஎப் ஆட்சியில் தேசிய நெடுஞ்சாலை 45 மீட்டரா அல்லது 30 மீட்டரா என அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்ட போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 45 மீட்டராக்கக் கோரியது. நான்கு வழி தேசிய நெடுஞ்சாலை, மலைப்பாதை, தேசிய நீர்வழி மற்றும் அரை அதிவேக ரயில் இணைப்பு ஆகியவற்றால் மட்டுமே மாநிலம் முன்னேற முடியும். கைய கப்படுத்தப்படும் நிலத்திற்கு சந்தை விலையை விட எல்டிஎப் அரசு அதிக விலை கொடுத்து வருகிறது என்றார் கொடியேரி.