கவின் சாதி ஆணவக் கொலை; வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்! கொலையாளி குண்டர் சட்டத்தில் கைது
கோட்டையில் ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்த ஐடி ஊழியர் கவின் சாதி ஆணவக்கொலை செய்யப்பட்ட வழக்கில், விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில், நெல்லை பாளையங்கோட்டை கே.டி.சி. நகர் பகுதியைச் சேர்ந்த சுர்ஜித் (24) என்ற கைது செய்யப்பட்ட நிலையில், அவரின் பெற்றோரும் காவல் உதவி ஆய்வாளர்களாக இருப்பவர்களுமான சர வணன் மற்றும் கிருஷ்ணகுமாரி ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். கவினின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த ‘நிலையில், வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்றி தமிழக காவல்துறை டிஜிபி உத்தர விட்டுள்ளார். கொலையாளி சுர்ஜித்தை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழும் போலீசார் கைது செய்துள்ளனர்.
மாற்றுத்திறனாளிகள், திருநங்கையர் 6 ஆயிரம் பேருக்கு கடனுதவி
சென்னை: மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள், நலிவடைந்த பழங்குடியினர், திருநங்கையரைக் கொண்டு சிறப்பு சுய உதவிக் குழுக்களை அமைப்பதன் வாயி லாக தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் அவர்களின் வறுமை மற்றும் பாதிப்புகளை குறைத்து, வாழ்வாதாரம் மேம்படுவதற்கான முறையான முயற்சி களை எடுத்து வருகிறது. தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம், சிறப்பு சுய உதவிக் குழுக்களில் உள்ள மாற்றுத் திறனாளிகள் மற்றும் திருநங்கைகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திடவும், அவர்களை தொழில் முனை வோராக ஊக்குவித்திடவும், தனி நபர் ஒருவருக்கு 40 ஆயிரம் ரூபாய் வீதம் 6 ஆயிரம் நபர்களுக்கு கடனுதவி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் பயனடைய, மாற்றுத் திறனாளி கள் மற்றும் அவரது பெற்றோர், கணவர், மனைவி ஆகியோர் சுய உதவி குழுக்களில் உறுப்பினராக இருக்க வேண்டும். திருநங்கையர்கள் சுய உதவிக் குழுவில் உறுப்பினராக இருந்தாலும் அல்லது இல்லாமல் இருந்தாலும் தொழில் செய்ய விருப்பமுள்ளவர்கள் ஒவ்வொருவருக்கும் இக்கடனுதவி வழங்கப்படும். 18 வயதுக்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும். ஊரகப் பகுதியில் வசிப்பவராக இருக்க வேண்டும். நிரந்தர முகவரி இருக்க வேண்டும். வங்கிக் கணக்கு தனி நபர் பெயரில் தொடங்கி இருக்க வேண்டும். மாற்றுத் திறனாளி எனில் UDID அடையாள அட்டை அல்லது மற்ற அடையாள அட்டை பெற்றிருக்க வேண்டும். திருநங்கை யர்கள் எனில் சமூக நலத்துறையால் வழங்கப்படும் அடையாள அட்டை பெற்றிருக்க வேண்டும்.
காற்றாலை மின் உற்பத்தியில் தமிழ்நாடு புதிய சாதனை
சென்னை: காற்றாலை மின் உற்பத்தியில் தமிழ்நாடு மீண்டும் சாதனை படைத்துள்ளது. ஒரே நாளில் 113.71 மில்லியன் யூனிட் காற்றாலை மூலம் மின் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மின் விநியோகக் கழகம் தெரிவித்துள்ளது. நடப்பாண் டில் இதுவரை 23 முறை 100 மில்லியன் யூனிட்டைக் கடந்து காற்றாலை மூலம் மின் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. கடந்த 2022 மற்றும் 2023-ஆம் ஆண்டுக்கான 21 முறை என்ற சாதனையை முறியடித்து புதிய சாதனை படைக்கப் பட்டுள்ளது. ஏப்ரல் 1 முதல் ஜூலை 25 வரையிலான காலகட்டத் தில் 7,150 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப் பட்டுள்ளது. இதே காலகட்டத்தில் கடந்த 2022, 2023, 2024 ஆகிய ஆண்டுகளில் சரசரியாக தலா 5,500 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு இருந்தது. நடப் பாண்டில் காற்றாலை மின் உற்பத்தி அதிகரித்து காணப்படுவதால் ஆண்டு முடிவில் அதிக மின் உற்பத்தி செய்து புதிய சாதனை படைக்கப்படும் என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டின் புத்தமை அறிவுசார் சொத்துரிமை மாநாடு துணை முதலமைச்சர் துவக்கி வைத்தார்
சென்னை, ஜூலை 30 - தமிழ்நாட்டின் புத்தமை (IN2TN) அறிவுசார் சொத்துரிமை முதலாவது மாநாட்டை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு தொழில்நுட்ப (ஐடிஎன்டி) மையத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப் பட்ட இந்த மாநாட்டில், துணை முதல மைச்சர் தொழில்நுட்ப கண்காட்சி யையும் பார்வையிட்டார். தமிழ் நாட்டைச் சேர்ந்த 16 ஆராய்ச்சியா ளர்களின் காப்புரிமை பெற்ற ஆழ்நிலை தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தன. ஐடிஎன்டி மையத்தில் நடத்தப் பட்ட பாத்ஃபைண்டர் நிகழ்ச்சி களின் மூலம் உள்வளர்ச்சி பெற்ற 5 ஆழ்நிலை தொழில்நுட்பம் மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்ப புத்தொ ழில் நிறுவனங்களுக்கு விதை நிதியாக மொத்தம் 53.00 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளையும் வழங்கினார். நிகழ்ச்சியில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இயக்குநர் பா. ரஞ்சித்துக்கு ஜாமீன் கீழ்வேளூர்
: வேட்டு வம் படப்பிடிப்பில் கார் சேஸிங் காட்சியின் போது சண்டைப் பயிற்சி யாளர் செ. மோகன்ராஜ் (வயது 52) பலியா னார். இதுதொடர்பாக கீழையூர் காவல் நிலை யத்தில் இயக்குநர் ரஞ்சித் உட்பட நான்கு பேர் மீது கவனமின்றி மரணத்தை விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் தொடர் புடைய மூவர், ஏற்கெனவே பிணையில் விடுவிக்கப்பட்ட நிலை யில், கீழ்வேளூர் மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் இயக்கு நர் பா. ரஞ்சித் புதனன்று ஆஜரானார். நீதிமன்றப் போராட்டம் காரணமாக வழக்கறிஞர் ஆஜராகா மல் இருந்த நிலையில், பா. ரஞ்சித்துக்கு பிணை வழங்கி நீதிபதி மீனாட்சி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
‘ஆபாச வீடியோ’ ராகவனுக்கு பதவி
சென்னை: தமிழ்நாடு பாஜகவில் கிடு கிடுவென ஏறுமுகம் கண்டவர் கே.டி.ராகவன். மாநிலத் தலைவர் பதவிக்கான ரேஸிலும் இடம்பிடித்தார். ஆனால் 2021-ஆம் ஆண்டில், சொந்த கட்சியினரே வைத்த பொறியில் அவர் சிக்கினார். கே.டி. ராகவன் தொடர்புடைய ஆபாச வீடியோ வெளியாகி பர பரப்பை ஏற்படுத்தியது. இதனால், அவரிட மிருந்த பாஜக மாநில பொதுச்செயலாளர் பதவியும் பறிபோனது. ஆனால், தற்போது, ஆபாச வீடியோவில் சிக்கிய கே.டி. ராகவனுக்கு மாநில பிரிவு அமைப்பாளர் பதவியை பாஜக வழங்கி யுள்ளது.
விஜயதாரணிக்கு மீண்டும் ஏமாற்றம்!
சென்னை: தமிழக பாஜக துணைத்தலைவ ராக திரைக் கலைஞர் குஷ்பூ நியமிக்கப்பட்டு உள்ளார். இவருடன் மேலும் 13 பேருக்கு பதவி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து விட்டு, காங்கிரசிலிருந்து பாஜக- வுக்கு தாவிய விஜய தாரணிக்கு எந்த பொறுப் பும் வழங்கப்படவில்லை. இந்த முறையும் அவ ருக்கு ஏமாற்றமே மிஞ்சியது.