tamilnadu

img

திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவராக கனிமொழி நியமனம்!

சென்னை, ஜூன் 10- திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவராக அக்கட்சியின் துணைப்  பொதுச்செயலாளர் கனிமொழி  கருணாநிதி நியமிக்கப்பட்டுள்ளார். இதன்மூலம் மக்களவை - மாநி லங்களவை ஆகிய இரு அவை களுக்கும் சேர்த்து திமுக நாடாளு மன்ற குழு தலைவராக கனிமொழி செயல்படவுள்ளார். இதுதொடர்பாக திமுக தலை வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,  இத்தகவலை அவர் தெரிவித்துள் ளார். மேலும், திமுக மக்களவைக் குழு தலைவராக- அக்கட்சியின் பொருளாளர் டி.ஆர். பாலு நிய மிக்கப்பட்டுள்ளதாக அறிவித் துள்ள மு.க.ஸ்டாலின், மக்கள வைக் குழுத் துணைத்தலைவராக தயாநிதி மாறன், மக்களவைக் கொறடாவாக ஆ. ராசா ஆகியோ ரையும் நியமித்துள்ளார். இதேபோல மாநிலங்களவை குழுத் தலைவராக திருச்சி சிவா,  துணைத்தலைவராக மு.சண்முகம் ஆகியோர் நியமிக்கப்பட்டு இருப் பதுடன், மாநிலங்களவைக் கொற டாவாக வழக்கறிஞர் பி.வில்சன் நியமிக்கப்பட்டு உள்ளார்.

;