திருச்சிராப்பள்ளி, அக்.10 - திருச்சி - சிதம்பரம் நெடுஞ்சாலை விரிவாக்கத்திற்காக கல்லக்குடி பகுதியில் 68 குடியிருப்பு வாசிகளுக்கு மாற்று இடம் வழங்கப்படாமல் குடி யிருப்புகள் அகற்றப்பட்டன. இது குறித்து ஜார்ஜ் என்பவர் ‘எங்கே என் இடம்’ என்ற தலைப்பில் இசை ஆல்பத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன் முன்னிலையில் வெளி யிட்டார். இதையடுத்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில், உடனடியாக 23 பேருக்கு மாற்று இடம் வழங்கப்பட்டது. ஆனால் மீதமுள்ள 45 பேருக்கு இதுவரை மாற்று இடம் வழங்கப்படவில்லை. இதனை தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் மாற்று இடம் கோரி, இசை தகடு வெளியிடும் நிகழ்ச்சி திங்களன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி மாவட்டக் குழு அலுவலகமான வெண்மணி இல்லத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு சிபிஎம் புள்ளம்பாடி ஒன்றியச் செயலாளர் ரஜினிகாந்த் தலை மை வகித்தார். ஜார்ஜின் 2-ஆவது சிடி யை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பி.டில்லிபாபு வெளியிட, அதனை தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில தலைவர் டி.செல்லக்கண்ணு பெற்றுக் கொண்டார். இந்நிகழ்ச்சியில் சிபிஎம் புறநகர் மாவட்டச் செயலாளர் ஜெயசீலன், மாநி லக்குழு உறுப்பினர் க.சுவாமிநாதன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் நடராஜன், பழநிசாமி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி மத்தியக் குழு உறுப்பி னர் மோகனா உள்பட பலர் கலந்து கொண்டனர்.