தீக்கதிர் 5-ஆவது பதிப்பான திருநெல் வேலி பதிப்பின் துவக்க விழாவில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பால கிருஷ்ணன் பங்கேற்று உரையாற்றினார். அப் போது, “உண்மைக்கு மாறான பொய்ச் செய்தி களை உற்பத்தி செய்யும் தொழிற் சாலையாக பாஜக மாறிவருகிறது. இந்தத்தொழிற்சாலை உற்பத்தி செய்யும் செய்திகளே ஊடகங்களில் பிரதான மாக இடம்பெறுகின்றன. இந்தச் சூழலில் உண்மையை உரக்கச் சொல்லும் ஏடாக தீக்க திர் விளங்கும்” என்று கே.பாலகிருஷ்ணன் கூறினார். “தமிழகத்தில் திட்டமிட்டு சாதிய மோதலை உருவாக்கி மக்களை சீர்குலைக்க பாஜக முயற்சிக்கிறது. சாதி வெறியால் என்ன சாதிக்க முடியும்? ஒருவரை ஒருவர் அடக்கி யாள்வது உயர்வானதா?” என்று கேள்வி எழுப்பிய பாலகிருஷ்ணன், “அடக்குமுறை யையும் ஒடுக்குமுறையையும் தகர்ப்பது தான் மனித வாழ்க்கை” என்றும், “தீண்டாமைக் கொடுமை தொடர்வதில் எந்த நியாயமும் இல்லை” என்றும் தெரிவித்தார்.
மேலும், “சாதியவாதம் பாஜக - ஆர்எஸ்எஸ் அமைப்பிற்குத்தான் உதவி செய்யும். உழைப்பாளி மக்கள் சாதியால் பிரிந்துவிடக்கூடாது. கல்வி, வேலைவாய்ப் புக்கான பிரச்சனைகளில் சாதிகளை மறந்து மக்கள் போராடவேண்டும்” என்று கேட்டுக் கொண்டார். “தென் மாவட்டங்களில், குறிப்பாக, திரு நெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, குமரி மாவட்டங்களில் கல்வி, வேலைவாய்ப்பை அதிகரிப்பதற்கும், இந்த மாவட்ட இளைஞர்கள் சென்னை, திருப்பூர் போன்ற பிற மாவட்டங்களுக்கு இடம் பெயராமல், இங்கேயே அவர்களுக்கான வாய்ப்புக் களை உறுதிப்படுத்துவதற்கும் ஆக்கப்பூர்வ மான செய்திகளை தீக்கதிர் வழங்கும். செய்தி யோடு நின்றுவிடாமல், அரசுக்கும் இந்தப் பிரச்சனைகளைக் கொண்டு சென்று தீர்வு காணும். விவசாயிகள், விவசாயத் தொழிலா ளர்கள் நலன் சார்ந்த பிரச்சனைகளில் தனிக்கவனம் செலுத்துவது, பட்டியலின மக்களுக்கு எதிரான தாக்குதல்களுக்கு எதிராகக் குரல்கொடுப்பது, அனைத்துத் தரப்பு மக்களையும் ஒன்றிணைப்பது ஆகிய வற்றில் தீக்கதிர் தனது கடமையை ஆற்றும்” என்றும் கே. பாலகிருஷ்ணன் குறிப்பிட்டார்.