திண்டுக்கல், அக்.14- பெண்களை வீட்டுக்குள் பூட்டி வைப்பதற்கான காரணி மனுஸ்மிருதி தான் என்று திண்டுக்கல் புத்தக திருவிழாவில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.பால பாரதி கூறினார். ‘‘வரலாற்றுத் தடைகளை, சமூகத் தடைகளை, சமூக அநீதிகளை, கடந்து கடந்து முறியடித்துத்தான் பெண்கள் வந்திருக் கிறார்கள். ஆகவே பெண்களின் ஓட்டம் என்பது, அது குடும்பத்திற்குள் மட்டுமல்ல; கடந்த 3 ஆயிரம் ஆண்டுகளாக பெண் குழந்தைகளும் பெண்களும் ஓடிக் கொண்டேயிருக்கிறார்கள். பெண்கள் தான் சக்திமிக்கவர்கள் என்கிறார்கள், சக்தி யாகவே வழிபடுகிறார்கள். ஆனால், ஒன்றிய ஆட்சியை நடத்துகிறவர்களால் நாடாளு மன்றத்தில் 33 விழுக்காடு மகளிர் இட ஒதுக்கீடு சட்டத்தை நிறைவேற்ற முடிய வில்லை. இது தான் பெண்களுக்கு எதிரான அரசியல் தந்திரமும், சூழ்ச்சியாகவும் இருக்கிறது. இந்த நாட்டில் உருவாக்கப்படும் சட்டங்களில் பெண்களின் பங்கேற்பு நிச்சயமாக இல்லை. சட்டமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் 6 விழுக்காடு பெண்கள் தான் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். பெண் குழந்தைகளுக்கு சொல் லொண்ணா கொடுமைகள் இழைக்கப்படு கின்றன. திண்டுக்கல் மாவட்டத்தில் சிறுமிகளுக்கு எதிராக 287 பாலியல் குற்றங்களும், கொலைகளும் நடந்துள்ளன. இதுதொடர்பாக மகளிர் மேம்பாட்டுத் துறைக்கும், திண்டுக்கல் மாவட்ட காவல்துறைக்கும் நன்றாகத் தெரியும். 14 பேர் தான் இதுவரை குற்றம் இழைத்ததாக தண்டனை பெற்றிருக்கிறார்கள். 200 பேர் அந்த வழக்குகளிலிருந்து விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்கள். இந்த சிறுமிகள் மீதான குற்றங்களை யார் பாதுகாக் கிறார்கள் என்பது மிகப் பெரிய கேள்வி.
பெண் சிசுக்கொலை, கருக்கொலை, குழந்தையை பலாத்காரம் செய்வது, கொலை செய்வது, போன்ற சம்பவங் களின் வேர் எங்குள்ளது என்பதை அறிய வேண்டும். பெண்கள் வீட்டுக்குள் அடைத்து வைக்கப்பட வேண்டும் என்ற சித்தாந்தம் எங்கிருந்து வருகிறது. அதன் ஆணி வேர் எது என்று பார்த்தால் அதுதான் மனுஸ்மிருதி. மனுஸ்மிருதி நூலில் சூத்திரர்கள், பெண்கள் பற்றி சொல்லப்பட்டிருக்கிறது. பெண்கள் குழந்தைகளாக இருந்தாலும், முதியவர்களாக இருந்தாலும் ஆணுக்கு கட்டுப்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்றும், பெண்ணின் மனம் ஊசலாட்டமுடையது; அது எந்நேரமும் ஒரு உறுதியற்ற மனப்பான்மையோடு இயங்கக் கூடியது; பாலியல் ரீதியான இச்சைகள் உள்ள வர்கள் தான் பெண்கள்; குடும்பத்தில் உள்ள உறவினர்கள் கூட பெண்களிடமிருந்து தள்ளி தான் இருக்க வேண்டும்; பெண் களுக்கு கல்வி கற்க உரிமை கிடையாது; மந்திரமோ, தர்மங்களோ, வேதங்களோ கற்றுத்தர வேண்டிய அவசியமில்லை என்று மனுஸ்மிருதியில் எழுதப்பட்டுள்ளது. பெண்ணை கணவன் அடிக்கலாம், தந்தை அடிக்கலாம், சகோதரன் அடிக்க லாம், உதைக்கலாம். ஆனால் பெண், கணவனையோ, ஆண்களையோ கை நீட்டக்கூடாது என்ற மனுஸ்மிருதியில் எழுதி வைக்கப்பட்டுள்ளது. இத்தகைய கொடுமைகளுக்கு எதிராக ஒன்றுபடுவோம். இவ்வாறு அவர் பேசினார்.