tamilnadu

img

சேலத்தில் தீக்கதிர் சந்தா வழங்கல்

சேலம், டிச.6- தீக்கதிர் நாளிதழ் சந்தா வழங்கும் நிகழ்ச்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் விளக்க  சிறப்பு பேரவைக் கூட்டம்  சேலம் சிறை தியாகிகள் நினைவகத்தில் நடை பெற்றது. மாவட்டச் செயலாளர் பி.ராமமூர்த்தி தலைமை யில் நடைபெற்ற இந்நிக ழ்ச்சியில், மக்களிடம்  தீக்கதி ரை  கொண்டு செல்வோம் என்ற பொருளில் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் கே.காமராஜ், தீக்கதிரின் அரசியல் குறித்து மாநிலக் குழு உறுப்பினர் ஆர்.பத்ரி ஆகியோர் உரையாற்றினர். இந்த கூட்டத்தில் 100 தீக்கதிர் ஆண்டு சந்தாக்கள் ஒப்படைக்கப்பட்டன.  இந்நிகழ்வில் தீக்கதிர் கோவை பதிப்பின் பொது மேலாளர் எஸ்.ஏ.மாணிக்கம், விநியோக மேலாளர் நெல்சன்பாபு, சிபிஎம் சேலம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர். வெங்கடபதி, டி.உதயகுமார், ஏ.ராமமூர்த்தி, வி.கே.வெங்கடாச்சலம், எஸ்.கே.சேகர்,  எம். குணசேகரன், எ. முருகேசன், இடை குழு செயலாளர்கள், கிளை செயலாளர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

;