tamilnadu

img

பணத்திற்காக விதிகளை மாற்றுகிறதா விம்பிள்டன் நிர்வாகம்?

146 ஆண்டுகாலம் பாரம்பரிய தொடரான விம்பிள் டன் டென்னிஸ் தொடரில் பல்வேறு கட்டுப்பாடு கள் உள்ளன. வெள்ளை உடைகள் மட்டுமே அணிய வேண்டும், உடைகள் உடலை 80% அளவில் மறைக்க வேண்டும்,ஆபா சமாக இருக்கக் கூடாது, பெரியளவில் விளம்பர பேனர்கள் இருக்காது என பல்வேறு கட்டுப்பாடுகள் காலங்காலமாக கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில், நடப்பாண்டில் விம்பிள்டன் தொடரின் கட்டுப்பாடுகளில் மாற்றம் ஒன்று தென்பட்டுள்ளது. அது யாதெனில் விளம்பர கட்டுப்பாடுகளில் சிறிதளவு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முன்பெல்லாம் ஸ்பான்சர் செய்த நிறுவ னங்களின் பெயர் விம்பிள்டன் கோர்ட்டில் இருக்காது. ஆனால் நடப்பாண்டில் ஸ்பான்சர் செய்த 5 நிறுவனங்களின் பெயர்கள் புதிய நிகழ்வாக விம்பிள்டன் கோர்ட்டில் முளைத்துள்ளது. பணத்திற்காக பாரம்பரிய விதிகளை விம்பிள்டன் நிர்வாகம் மாற்றுகிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

விம்பிள்டன் கோர்ட்டில் உள்ள நிறுவனங்களின் விபரம் :

1. ஸ்லேஞ்சர் - பந்து வழங்கும் ஸ்பான்சர் பிரிட்டன் நிறுவனம் (54,250 பந்துகள்)
2. ஒப்போ - சீனாவின் ஸ்மார்ட்போன் நிறுவனம் (எந்த விதத்தில் ஸ்பான்சர் செய்கிறது என தெரியவில்லை)
3. ஐபிஎம் - டென்னிஸ் தொடரின் தொழில் நுட்பங்களை கண்காணிக்கும் அமெரிக்க நிறுவனம்
4. பார்க்லேஸ் - விம்பிள்டன் தொடரின் நிதி விவகாரங்களை கவனிக்கும் பிரிட்டன் வங்கி நிறுவனம் ஆகும்.
5. ஜாக்குவார் - பிரிட்டன் கார் நிறுவனம் (விம்பிள்டன் தொடருக்கான அனைத்து வாகன வசதிகளை கவனித்து வருகிறது)(இதுபோக உலகின் முக்கிய கடிகார நிறுவனமான சுவிஸின்
ரோலக்ஸ் நிறுவனம் நேரம் காட்டும் இடங்களில் உள்ளது. இது வழக்கம் போல இருப்பது. டென்னிஸ் உலகின் முக்கிய தொடர்களில் ரோலக்ஸ் நிறுவனத்தின் பெயர் பெரும்பாலும் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது)

புயல் வேகத்தில் வீசும் காற்று

விம்பிள்டன் டென்னிஸ் தொடர் இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகரில் மழைக்கான சூழல் அதிகமாக உள்ளது. லண்டனில் சூரியனை பார்ப்பது கானல் நீரைப் போன்று தான் உள்ளது. அதிகாலை முதலே கருமேகங்கள் திரள்வதால் மதிய நேரத்தில் கூட லண்டன் நகரம் மாலை 6 மணி போன்று இருள் சூழ்ந்த இருண்ட நிலையில் காணப்படுகிறது. இதுபோக பலமாக காற்று வேறு வீசி வருவதால் சாதாரண கோர்ட்களில் விளையா டும் வீரர் - வீராங்கனைகள் மிகுந்த சிரமத்துக்கு இடையே விளை யாடி வருகின்றனர். மெயின் கோர்ட், சென்டர் கோர்ட் ஆகிய பகுதிகளில் கட்டுமான வசதி இருப்பதால் அங்கு காற்று வீசினா லும் தெரியாது. ஆனால் சாதாரண கோர்ட்களில் கட்டுமான வசதி இல்லாமல் இருப்பதால் அங்கு காற்று வீசினால் விளை யாடுவதற்கு சற்று சிரமம் ஏற்படுகிறது. அதாவது சரியாக விளை யாட முடியாமல் வீரர் - வீராங்கனைகள் திணறுகின்றனர்.

டிஎன்பிஎல் ... இன்று விடுமுறை

7-வது சீசன் டிஎன்பிஎல் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலை யில், புதனன்று லீக் ஆட்டங்கள் நிறைவு பெற்றது. வெள்ளியன்று பிளே ஆப் சுற்று ஆட்டங்கள் தொடங்கும் நிலையில், பிளே ஆப் சுற்றின் குவாலி பையர் 1 மற்றும் எலிமினேட்டர் ஆட்டங்கள் சேலத்திலும், குவாலிபையர் 2 மற்றும் இறுதி ஆட்டங்கள் திருநெல்வேலியிலும் நடைபெறுகிறது. இந்நிலையில், மைதான இடம்பெயர்வு காரணமாக (திருநெல்வேலி டூ சேலம்) வியாழனன்று டிஎன்பிஎல் தொடருக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.