மேலூர்,ஜன.12- மதுரை மாவட்டம் மேலூர் பகுதியானது முல்லைப் பெரியாறு- வைகை அணை தண்ணீரை நம்பியுள்ள கடைமடைப் பகுதியாகும். இங்கு நெல், கரும்பு, வாழை உள்ளிட்ட பயிர்கள் பிரதான விவசாயமாக பார்க்கப்படு கிறது. மேலூர் வட்டார பகுதிகளில் கடித்து சாப்பிடும் செங்கரும்புக்கு அடுத்த படியாக சீனி தயாரிக்க பயன்படும் ஆலைகரும்புகள் அதிகளவில் மேலூர் பகுதியில் பயிரிடப்படுகின்றன. வயல் வெளிகளில் கொட்டகைகள் அமைத்து வெல்லம் காய்ச்சும் பணி நடைபெறுகிறது. ஆலைக் கரும்பி லிருந்து தயாரிக்கப்படுகிறது அச்சு வெல்லம், உருட்டு வெல்லம் (இதனை மண்டை வெல்லம் எனவும் அழைக்கின்றனர்). இவற்றில் அச்சு வெல்லமா னது இனிப்புப் பண்டங்களில் சேர்க்கப்படுவதோடு, மருந்துப் பொருளா கவும் பண்டைக்காலம் முதல் பயன்படுகிறது. அச்சு வெல்லம் மற்றும் உருட்டு வெல்லம் தயாரிப்பது முக்கியக் குடிசைத் தொழிலாக கிராமங்களில் நடைபெற்று வருகிறது. ஆனால், இன்று இத்தொழில் அழியும் நிலையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. பெரிய இரும்பு வட்டையில் ஆலைகரும்பிலிருந்து இயந்திர மிஷினி லிருந்து பிரித்தெடுக்கப்பட்ட கரும்புச் சாறை ஊற்றி அதனுடன் சில மூலப் பொருட்களை கலந்து சுமார் ஒரு மணிநேரமாக தீ அடுப்பில் வைத்து காய்ச்சுகின்றனர்.
பின்னர் அதைப் பதமாக எடுத்து மரத்தொட்டியில் ஊற்று கின்றனர். சுமார் மூன்று மணிநேரம் காய்ந்த பிறகு அந்த சர்க்கரை பாகுகளை நேர்த்தியாக கையால் உருட்டி, உருட்டு வெல்லமாக தயாரிக் கின்றனர். அதனை 30 கிலோ எடைகொண்ட ஒரு சாக்கு பையில் வைத்து தைத்து மூடையாக அடுக்கி வைக்கின்றனர். இதுபோல நாள்தோறும் சுமார் 30 முதல் 50 மூடைகள் வரை உற்பத்தி செய்யப்படு கிறது. இதற்காக மேலூர் அருகே கொட்டகுடி கிராமத்தில் அதிகம் ஆலை கரும்புகள் பயிரிடப்பட்ட இப்பகுதியில் உடுமலைப் பேட்டை பகுதியி லிருந்து வந்துள்ள தொழிலாளர்கள் தங்கி வேலை பார்த்து வருகின்ற னர். அவர்களின் உழைப்பை பொறுத்து ஊதியம் வழங்கப்பட்டு வருகின்றது. உருட்டு வெல்லத்தினை மூடையாக அடுக்கி இங்கிருந்து மதுரையி லுள்ள சந்தைக்கு கொண்டு செல்லப்படுகின்றது.
அங்கு வெல்லத்தின் தரம், வண்ணம் உள்ளிட்டவை மூலம் கொள்முதல் செய்யப்படு கின்றது. அதில் தரமில்லை என்றால் அவை உற்பத்தியாளர்களிடமே திருப்பி அனுப்பப்படுவதால் சற்று கவனமாகவே உற்பத்தி செய்யப்படுகின்றன. தற்போது பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் காரணத்தால் கொட்டகுடி, வெள்ளலூர், வண்ணாம்பாறைபட்டி, கோட்ட நத்தம்பட்டி உள்ளிட்ட இடங்களில் வெல்லம் உற்பத்தி செய்யப்படு கின்றது. வெளிமாவட்டங்களிலிருந்து தங்கள் குடும்பத்துடன் தங்கி பணிபுரியும் இத்தொழிலாளர்களுக்கு சீசன் காலங்களில் மட்டுமே வேலை வாய்ப்பு உள்ளதாகவும் மற்ற நாட்களில் சொந்த ஊர்களுக்கு திரும்பி விடுவ தாகவும் பொங்கல் பண்டிகை துவங்கும் சில மாதங்களுக்கு முன்பு மேலூர் வட்டாரத்திற்கு வருவதாகவும் பின்னர் ராஜபாளையம் உள்ளிட்ட பகுதி களுக்கு சென்று அங்கு வெல்லம் தயாரிக்கும் பணியில் ஈடுபடுவதாக வும் தெரிவிக்கிறார்கள். இத்தொழிலை நம்பியுள்ள வெல்லம் தயாரிக்கும் தொழிலாளர்களையும் காக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெல்லம் தயாரிக்கும் தொழிலாளர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
இதுகுறித்து விவசாயி அம்மாசி கூறுகையில், மூலப்பொருட்களை வெல்ல மாக, அச்சுவெல்லமாக மாற்றி 30 கிலோ கொண்ட சிப்பம் தயாரிப்பதற்கு ரூ.250 முதல் ரூ.300 வரை கூலி வழங்குகிறோம். தொழிலாளர்களின் உற்பத்திக்கு தகுந்தாற்போல் கூலி நிர்ணயம் செய்துள்ளோம். மதுரை சித்திரக்காரத் தெருவில் உள்ள கமிஷன் கடைகளுக்குக் கொண்டு செல்கிறோம் ரூ.450, 500, ரூ.600 என விலை நிர்ணயம் செய்கின்றனர். ரகம், தரம் இதில் உண்டு. சில சிப்பங்களை ரூ.450-க்கு வாங்கு வார்கள், சில சிப்பங்களை ரூ.600-க்கு வாங்குவார்கள். போதுமான பலன் கிடைக்கவில்லை. எங்கள் பகுதியில் பல ஆலை கொட்டகைகள் இயங்கி வந்தன. இப்போது அவை சுருங்கி வருகிறது கவலையளிக்கிறது என்றார்.