tamilnadu

img

ஒன்றிய அரசுக்கு இணையான ஓய்வூதியம்

சென்னை, டிச. 17 - ஒன்றிய அரசுக்கு இணையான ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. ஓய்வூதியம் என்பது கொடுபடா ஊதியம் என்று உச்சநீதிமன்றம் 1982 ஆம் ஆண்டு டிசம்பர் 17ந் தேதி தீர்ப்பளித்தது. அந்நாளை ஓய்வூதியர் தினமாக ஓய்வூதியர்கள் கடைபிடிக்கின்றனர். தமிழ்நாடு அனைத்து ஓய்வூதியர்கள் சங்கங்க ளின்  கூட்டமைப்பு சார்பில்  வெள்ளியன்று(டிச.17)  பல்லவன் இல்லம் முன்பு ஓய்வூதியர் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் போராட்டத்தில் வலி யுறுத்தப்பட்டன. இந்நிகழ்வுக்கு கூட்ட மைப்பின் தலைவர் பி.ஏபெல் தலைமை தாங்கினார். செயலாளர் என்.கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார். அகில இந்திய மாநில அரசு ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு பொருளாளர் ஆர்.சீனிவாசன் தொடக்க உரையாற்றினார். தமிழ்நாடு அரசு போக்கு வரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் சென்னை கிளை பொதுச் செயலாளர் கே.வீரராகவன், தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் தென் சென்னை கிளைத்தலைவர் ஆர்.கோவிந்தராஜன், தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் சென்னை மாவட்டச் செயலாளர் என்.ராமசாமி, தமிழ்நாடு அரசு ஓய்வு பெற்ற பள்ளி - கல்லூரி ஆசிரியர் நலச்சங்க பொருளாளர் கு.பூபாலன், சென்னை பெருநகர குடி நீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய  ஓய்வூதியர் நல சங்க பொதுச்செயலாளர் எம்.நாராயணசாமி ஆகியோர் பேசினர். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் பொதுச் செயலாளர் கே.கர்சன் நிறை உரையாற்றினார்.  கூட்டமைப்பின் பொருளாளர் ஏ.முத்துக்குமார் நன்றி கூறினார்.

;