சின்னாளப்பட்டி, செப்.25- திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு கண வாய்ப்பட்டி 15 ஆவது வார்டில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கிவைத்த பசுமை தமிழகம் இயக்க துவக்கவிழா நடைபெற்றது. கணவாய்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ரமேஷ் பசுமை வதிலை இயக்கத்தின் சார்பாக மரக்கன்றுகளை நட்டு வைத்தார். இவ்விழாவில் நிர்வாகிகள் மற்றும் பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.