உழைப்புச் சக்தி என்பது இன்றைய முதலாளித்துவ சமுதாயத்தில், ஒரு சரக்காக இருக்கிறது... இது மிகுந்த சிறப்பியல்புகள் கொண்ட சரக்காக விளங்குகிறது. உதாரணமாக, மதிப்பை உருவாக்கும் சக்தியாகவும், மதிப்பின் தோற்றுவாயாகவும், மேலும், தக்கபடி பயன்படுத்தும்போது, தான் கொண்டுள்ள மதிப்பை விட அதிக மதிப்பினை தோற்றுவிக்கும் மூலமாகவும் விளங்கும் சிறப்பியல்பைக் கொண்டுள்ளது.
- பிரடெரிக் ஏங்கெல்ஸ் -