tamilnadu

img

இந்தியாவில் மநுதர்ம ஆட்சி தொடர்கிறது: தொல்.திருமாவளவன் சாடல்

சென்னை, அக். 2- இந்தியாவில் இன்னும் மநுதர்ம ஆட்சியே நடைபெறுவதாகவும், அதனால் தான் ஆணவப் படுகொலைகள் தொடர்வ தாகவும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கூறினார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனின் 60ஆவது பிறந்தநாள் மணி விழாவையொட்டி தமிழ் ஸ்டுடியோஸ் சார்பில் சமத்துவம், மக்கள் எழுச்சி, ஒன்று சேர் எனும் தலைப்பில் குறும்பட மற்றும் ஆவணப்பட கலை திரு விழாவின் பரிசளிப்பு நிகழ்வு சென்னை சாலி கிராமத்தில் உள்ள பிரசாத் லேபில் சனிக் கிழமை (அக். 1) நடைபெற்றது. நிகழ்ச்சியில் பேசிய திருமாவளவன், இந்தியாவுக்கான 4 தூண்களும், அரசியல மைப்பின் அடிப்படைக் கோட்பாடுகளா மான நீதி, சுதந்திரம், சமத்துவம், சகோ தரத்துவமே இன்று கேள்விக்குறியாகி உள்ளது.

மனிதநேயம் இல்லாதவர்களிடம் சமத்துவம், சகோதரத்துவம், ஜனநாய கத்தை எதிர்பார்க்க முடியாது. பாசி சத்துக்கு எதிரானதே ஜனநாயகம். ஆதிக்கம், ஒடுக்குமுறை, சுரண்டல் ஆகிய மூன்று தான் மனிதகுலத்தின் பகை சக்திகள். இந்திய சமூக கட்டமைப்பில் வர்ணாசிரம தத்துவம், சகோதரத்துவத்தை சிதைத்துள்ளது என்றார்.  சாதிய பிரச்சனை என்பது தலித்து களுக்கும், தலித் அல்லாத மக்களுக்கும் இடையேயான பிரச்சனை அல்ல. பார்ப்ப னர்களுக்கிடையேயும் சமத்துவமின்மை நில வுகிறது. 50 சாதிகள் பார்ப்பனர்களிடத்தில் உள்ளது. கருத்தியல் பகையே சனாதனம். அம்பேத்கரும், பெரியாரும் மாமனிதர்கள். அவர்களை யாரோடும் ஒப்பிட முடியாது. சராசரி மனிதர்கள் வியப்படையும் வகை யில் இருவரும் வாழ்ந்துள்ளனர். பார்ப்பன சகோதரர்கள் ஆடு, மாடு மேய்த்துள்ளனரா? விவசாயம் செய்துள்ளனரா? நகை செய்துள்ளனரா? மூட்டை சுமந்துள்ளனரா? நான் பார்ப்பனர்களை வெறுக்கவில்லை; வெறுப்பு அரசியல் செய்யவில்லை. விளக்க அரசியல் செய்கிறேன். இன்னும் மநுதர்மம் தான் ஆட்சி செய்கிறது. அதனால் தான் ஆணவப்படுகொலைகள் தொடர்கி றது என்று அவர் கூறினார்

தனிமனித இனம், சுதந்திரத்தை பாது காப்பதே ஜனநாயகம். குறும்படக் கலைஞர்கள், ஆவணப்படக் கலைஞர்களே புரட்சிக்கு வித்திடுவார்கள். அவர்களை ஊக் கப்படுத்த வேண்டும். கருத்தியலைப் பரப்பும் தளமே குறும்படங்கள். திரைப்படங்களை விட குறும்படங்கள் தான் சமூகவலை தளங்கள் மூலம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று திருமாவளவன் பேசினார். முன்னதாக குறும்பட, ஆவணப்பட கலைத் திருவிழாவில் போட்டிக்கு வந்த 200 படங்களில் முதல் சுற்றில் 38 படங்கள் தேர்வு செய்யப்பட்டது. சமத்துவம் என்ற தலைப்பில் போட்டி அமைந்துள்ளதால் முதல் பரிசு, இரண்டாம் பரிசு என்று வரி சைப்படுத்தாமல் சிறந்த 10 படங்களுக்கு தலா 20,000 ரூபாய் என மொத்தம் 2 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது.

;