tamilnadu

img

அலகுகளின் நிறம் மாற்றும் ஒலி மாசு - சிதம்பரம் இரவிச்சந்திரன்

காலநிலை மாற்றம் பாடும் பறவைகளை எந்த அளவிற்கு பாதித்துவருகிறது என்று கலிபோர்னியாவில் கடந்த பதி னொரு ஆண்டுகளாக நடந்த ஆய்வுகளில் இருந்து  தெரியவந்துள்ளது. ஈரப்பதம் அதிகமானதனால் பறவை முட்டைகள் பொரியாமல் அழிந்தன. ஹவுஸ்  ரென், வெஸ்ட்டேர்ன் ப்ளூ பேர்ட், ட்ரீ ஸ்வாலோ போன்ற பறவை இனங்களில் குறை எடையுடன் குஞ்சுகள் பிறந்தன. பறவைகளின் பாட்டு, பாடும் பற வைகளின் சங்கீதம் என்றெல்லாம் இலக்கியங்க ளில் வர்ணிக்கப்படுவதைக் கேள்விப்பட்டிருக்கிறோம்.

பாடும் பரவை என்றால் என்ன?

ஆனால் பறவையியலில் பாடும் பறவை (song bird) என்றால் பறவை பாடினால் மட்டும் போதாது. இவை தனிச்சிறப்புமிக்க ஆசின்ஸ் (Oscines) என்ற  பிரிவைச் சேர்ந்த உயிரினங்கள். இவை மரங்களில் குடி யிருப்பவை. மரக்கிளைகளை இறுக்கிப் பிடிக்  கும்வகையில் இவற்றின் கால்விரல்கள் அமைந்தி ருக்கும். பாடும் திறமை மற்றும் உடல் அளவில் வேறு பட்டிருந்தாலும் 4000 இனங்களைச் சேர்ந்த இப்பற வைகள் அனைத்தும் பாடும் திறன் பெற்றவை. நம்  ஊரில் வாழும் வானம்பாடி, ராப்பாடிப் பறவைகள் இப்பிரிவைச் சேர்ந்தவையே.

பாடும் பறவைகள் இல்லாமல் போனால்?
பாடும் பறவைகள் இல்லாமல் போனால் காடுகள்  நிசப்தமாகிவிடும். மனிதக் குறுக்கீடுகளால் கலி போர்னியாவில் செண்ட்ரல் வாலி (Central valley)  பள்ளத்தாக்கில் இருந்து பறவைகள் இடம்பெயர்ந்து  சென்றன. இளம் குளிரும் இளம் சூடும் நிலவும் வசந்தம் வரும்போது இங்குள்ள பறவைகள் கூடு  கட்டி வாழ ஆரம்பிக்கும். ஆனால் மழை அதிகமாகி விட்டால் வாயுமண்டலத்தில் வெப்பநிலை உயரும். இது பாடும் பறவைகளின் இனப்பெருக்கத்தை பாதிக்  கிறது. இது பற்றிய ஆய்வுக்கட்டுரை உயிரியல் பாது காப்பு (Biological Conservations) என்ற ஆய்வித ழில் வெளியிடப்பட்டுள்ளது.

இணை சேரத் தடையேற்படுத்தும் சூழ்நிலை 

இப்பள்ளத்தாக்கிற்கு அருகில் இருக்கும் யோலோ கவுண்ட்டியில் புட்டா க்ரீக் நெஸ்ட் பாக்ஸ்  நெடுஞ்சாலையில் உள்ள பாடும் பறவைகளை உயர்ந்த வெப்பமும் மழையில் ஏற்படும் மாற்றங்க ளும் எவ்வாறு பாதிக்கிறது என்று இந்த ஆய்வுக்கட்  டுரை விவரிக்கிறது. செண்ட்ரல் வாலியை மைய மாக வைத்து இந்த ஆய்வுகள் நடத்தப்பட்டதால் இதேபோன்ற காலநிலை நிலவும் மத்திய தரைக் கடல் பகுதியில் வாழும் பாடும் பறவைகளுக்கும் இதே கதி வரலாம் என்று அஞ்சப்படுகிறது.

2100ல்

2100 ஆகும்போது இப்பிரதேசத்தின் சராசரி  வெப்பநிலை 3 டிகிரி அதிகரிக்கும் என்று கணிக்கப்  பட்டுள்ளது. இது பறவைகள் வாழ இயலாத வெப்ப நிலை. நெஸ்ட் பாக்ஸ் பகுதியில் இருந்து பதி னொரு ஆண்டுகளாக திரட்டப்பட்ட தரவுகளின் அடிப்படையில் இந்த ஆய்வுகள் நடந்தன. கூடு  கட்டி இசை பாடும் இயல்பையுடைய வெஸ்ட்டெர்ன்  ப்ளூ பேர்ட், ட்ரீ ஸ்வாலோ, ஹவுஸ் ரென், ஆஸ்ட்ரேட்டட் ப்ளைக்கேட்ச்சர் ஆகிய இனப் பறவைகள் ஆய்விற்கு உட்படுத்தப்பட்டன. இந்த இனங்களைச் சேர்ந்த 7100 குஞ்சுகள் பற்றிய விவ ரங்கள் ஆய்வு செய்யப்பட்டது.

உலகின் நம்பிக்கை

உயர்ந்த வெப்பநிலை, அதிக மழை ஆகிய வற்றால் அகப்பட்டு பறவைகளின் ஆரோக்கிய நிலை மோசமடைந்தது. ஈரப்பதம் அதிகமானதால் பறவைகளின் முட்டைகள் பொரியாமல் அழிந் தன. வெஸ்ட்டெர்ன் ப்ளூ பேர்ட் மற்றும் ட்ரீ ஸ்வாலோ பறவைகளுக்கு எடை குறைந்த குஞ்சு களே பிறந்தன. இனப்பெருக்ககாலத்தில் நிலவிய உயர்ந்த வெப்பநிலை இணை சேர்வதை வெகு வாக பாதித்தது. இயல்பான காலநிலையிலும் மாறிய  சூழ்நிலையிலும் பாதிக்கப்படாமல் வாழும் திறமை யுடைய சிறிய எண்ணிக்கையிலான பாடும் பறவை கள் மட்டுமே இன்று உலகின் நம்பிக்கை.

வாழப் போராடும் பறவைகள்

சூழல் சீரழிவுகளுடன் போராடி வாழும் பறவை களைக் காக்க இப்போதிருக்கும் சூழல் மண்ட லங்களையேனும் பாதுகாப்பதே ஒரே தீர்வு என்று சூழலியல் ஆய்வாளரும், ஆய்வுக்கட்டுரையின் இணை ஆசிரியருமான மெலானி ட்ரவான் கூறு கிறார். கடுமையான காலநிலை மாற்றங்கள் ஏற்படும்  பகுதிகளில் வாழும் பறவைகள் அப்பகுதிகளில் சம்ப விக்கும் சிறிய மாற்றங்களால் கூட பெரிதும் பாதிக்கப்  படுகின்றன என்று ஆய்வுக்குழுவின் முன்னணி ஆசிரியர் ஜாசன் ரிக்கியோ கூறுகிறார்.

இடம்பெயரும் பறவைகள்

செண்ட்ரல் பள்ளத்தாக்கில் காலநிலை மாற்றம் உண்டானபோது ட்ரீ ஸ்வாலோ, வெஸ்ட்டர்ன் ப்ளூ  பேர்ட் பறவைகள் அருகில் உள்ள புட்டா க்ரீக் பகுதி யிலிருக்கும் தோட்டங்களுக்குச் சென்று வெற்றிகர மாக இனப்பெருக்கம் செய்தன. இது புட்டா க்ரீக்  கிற்கு அருகிலிருக்கும் பகுதிகள் பறவைகள் இணை  சேர சரியான இடமில்லை என்று முன்பு கருதப்பட்ட தற்கு எதிர்மாறாக இருந்தது. நெஸ்ட் பாக்ஸில் 2000ல்  ஆய்வுகள் தொடங்கின. அப்பகுதியில் அப்போது  விவசாய நிலங்களுக்காக மரங்கள் வெட்டப்பட்டது  மரக்கிளைகளில் வாழ விரும்பும் இயல்புடைய பற வைகளை வெகுவாக பாதித்தது.

நகர இரைச்சலும் அலகுகளின் நிறமும்

இதனால் இப்பகுதியில் முன்பு அதிகம் காணப்  பட்ட வெஸ்ட்டர்ன் ப்ளூ பெர்ட் மெல்ல மறையத்  தொடங்கின. ஆய்வின் தொடக்கத்தில் 100 பற வைப்பெட்டிகள் நிறுவப்பட்டன. இப்போது இது இரு நூறாக உள்ளது. எல்லா பெட்டிகளிலும் நூற்றுக்க ணக்கில் ப்ளூ பறவைகள் வாழ்கின்றன. பாடும் பற வைகள் உட்பட அனைத்து உயிரினங்களும் நகர  இரைச்சலால் பாதிக்கப்படுகின்றன. பாடும் பறவை களின் அலகுகளின் நிறத்தையும் ஒலி மாசு பாதிக்கி றது என்று ப்ளோரிடா அட்லாண்டா பல்கலைக் கழக ஆய்வாளர்களின் புதிய ஆய்வுகள் கூறுகின்றன.

ஒலி மாசு மாற்றும் அலகுகளின் நிறம்
சீஃப்ரா பிஞ்ச் (Zebra finch) என்ற பாடும் பறவை யினத்தில் ஆய்வுகள் நடந்தன. இதில் பெண் பறவை கள் சாம்பல் நிறமுடையவை. ஆண் பறவைகள் வெள்ளை கறுப்பு ஆரஞ்சு கலந்த பல வண்ண நிறம்  உடையவை. பெண் பறவைகளின் அலகின் நிறம் ஆரஞ்ஜு. ஆணிற்கு பளபளப்புடைய சிவப்பு நிறம்.  நிறத்தில் காணப்படும் ஏற்றத்தாழ்வுகள் இவற்றிடை யில் சமூக மதிப்பை நிர்ணயிக்கிறது. பறவைகள் பாடும் குரல்கள் நகரங்களின் வெவ்வேறுவிதமான இரைச்சல்களுக்கு உட்படுத்தப்பட்டு நீண்டகாலம் ஆராயப்பட்டது.

நகர இரைச்சல்

நகரத்தின் இரைச்சல்களுக்குப் பழக்கப்பட்ட  பெண் பறவைகளின் அலகின் நிறம் அதிகமாவ தும் ஆணின் அலகின் நிறம் மங்குவதும் கண்டு பிடிக்கப்பட்டது. போக்குவரத்து சத்தங்கள் பறவை களை அழுத்தத்திற்கு உள்ளாக்குகின்றன. இது அவற்றின் உடலில் நிற அளவிற்குக் காரணமான கார்ட்டி காஸ்ட்ரோன் என்ற வேதிப்பொருளின் அளவை அதிகரிக்கிறது. இது அலகின் நிறத்தை பாதிக்கிறது என்று பல்கலைக்கழக ஆய்வாளர் ரிண்டி சி ஆண்டர்சன் கூறுகிறார். ஒலி மாசு மனிதனை மட்டுமில்லாமல் கற்பனைக்  கும் எட்டாத விதத்தில் எல்லா உயிரினங்களையும் எவ்வாறு பாதிக்கிறது என்பதற்கு இது சிறந்த எடுத்துக்காட்டு.