tamilnadu

img

பெரியார் பெயரில் உணவகம் அமைத்ததால் எரிச்சல் இந்து முன்னணி குண்டர்கள் வெறியாட்டம்

கோயம்புத்தூர், செப்.14- கோவை காரமடை அருகே பெரியார் பெயரில் உணவகம் அமைத்ததால் எரிச்சலடைந்த இந்து முன்னணி குண்டர்கள் உணவகத்தை அடித்து நொறுக்கி, உரிமையாளர் மற்றும் அவர்கள் குடும்பத்தை தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  கோவை மாவட்டம் கார மடை அருகே கண்ணார்பாளை யம் பகுதியைச் சேர்ந்தவர் பிரபா கரன். இவர் அதேபகுதியில் கறிக்  கோழி விற்பனை செய்து வரு கிறார். இந்நிலையில் பிரபாகரன்  மற்றும் இவரது நண்பர் அருண் இருவரும் இணைந்து புதிதாக  உணவகம் திறக்க முடிவு செய்  துள்ளனர். இந்த உணவகத்திற்கு தந்தை பெரியார் உணவகம் என அருண் பெயர் வைத்து, பெயர்ப் பலகையை வைத்துள்ளார். புத னன்று உணவகம் திறக்க இருந்த நிலையில் செவ்வாயன்று இரவு கடைக்கு வந்த இந்து முன்னணி யைச் சேர்ந்த குண்டர்கள் தகராறு செய்துள்ளனர். இந்த பகுதி இந்து அமைப்பின் கோட்டை. அதனால் இங்கு பெரியார் பெய ரில் உணவகம் வைக்கக் கூடாது என மிரட்டி கடையை அடித்து நொறுக்கினர். மேலும், அருணை சரமாரியாக தாக்கினர். பின்  னர், அருணின் தாயார் உள்ளிட்ட குடும்பத்தினரை தாக்கி மிரட்டி யுள்ளனர். 

இதில், அருண்(21) படுகாய மடைந்தார். இதன் பின்னர் உண வகத்தைச் சூறையாடிய கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது. பலத்த காயமடைந்த அருண்  மருத்துவமனையில் சிகிச்சைக் காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதில், பிரபாகரனுக்கும் காய மேற்பட்டுள்ள நிலையில் அவ ருக்கும் சிகிச்சை அளிக்கப்பட் டது.  இச்சம்பவம் குறித்து கடை யின் உரிமையாளர் பிரபாகரன் கொடுத்த புகாரின் பேரில் வழக்  குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட காரமடை போலீ சார் உணவகம் மற்றும் உரிமை யாளர் மீது தாக்குதல் நடத்திய இந்து முன்னணி கிளைச் செய லாளர் ரவி பாரதி, சரவணக் குமார், சுனில், விஜயகுமார்,  பிரபு, பிரபாகரன் ஆகிய 6 பேரை கைது செய்தனர். மேலும் அவர்  கள் மீது பெண் வன்கொடுமை  தடுப்புச் சட்டம், கலகம் செய் தல், ஆபாசமாகப் பேசுதல், அத்து  மீறல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ள னர். இத்தாக்குதல் சம்பவம் கார ணமாக காரமடை பகுதியில் பர பரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.. வடமாநிலங்களில் முன்னெ டுக்கும் ரவுடியிச நடவடிக்கை யை தமிழகத்திலும் சங் பரிவார் அமைப்புகள் துவக்கியுள்ளது பொதுமக்களிடையே அச் சத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்  னுணர்ந்து செயல்பட வேண்டிய காவல்துறையினர் அலட்சிய மாக இருப்பது அரசியல் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களிடம் அதிருப்தியையும் அதிர்ச்சி யையும் உருவாக்கியுள்ளது.

;