சென்னை, செப். 22 - பல்கலைக் கழக பாடங்களில் கவிஞர் தமிழ்ஒளியின் படைப்புகளை சேர்க்க வேண்டும் என்று பல்கலைக்கழகங்களு க்கு உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி அறிவுறுத்தி உள்ளார். கவிஞர் தமிழ்ஒளியின் நூற்றாண்டு தொடக்க விழா மற்றும் படைப்புலகம் குறித்த கருத்தரங்கம் செப்.20-21 தேதி களில் சென்னைப் பல்கலைக்கழக வளா கத்தில் நடைபெற்றது. சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ் இலக்கியத் துறையும், கவிஞர் தமிழ்ஒளி நூற்றாண்டு விழாக் குழுவும் இணைந்து இந்த நிகழ்வை நடத்தின. இந்த கருத்தரங்கு நிறைவு நிகழ்வில் பங்கேற்ற அமைச்சர் க.பொன்முடி, தமிழ்ஒளி படைப்பு குறித்து ஆய்வுக்கட்டு ரை சமர்ப்பித்த தென்காசி மாவட்டம், மேல்செங்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளி 10ஆம் வகுப்பு மாணவி சாதனா, 7ஆம் வகுப்பு மாணவர் அகிலன் ஆகி யோரை பாராட்டி சான்றிதழ் வழங்கினார். நூற்றாண்டு விழாவை தொடங்கி வைத்து அவர் பேசியதன் சுருக்கம் வருமாறு: கலைஞர் கருணாநிதி பிறந்த ஆண்டில் பிறந்தவர் கவிஞர் தமிழ்ஒளி. கலைஞரை போன்றே தமிழ் ஆற்றல் மிக்கவராக இருந்தார். அனைத்து துறை களிலும் முத்திரை பதித்தார். பன்முகத் திறமை கொண்டவரான தமிழ்ஒளி, மேலும் சில காலம் வாழ்ந்திருந்தால் கலை ஞரை போன்றே சாதனை புரிந்திருப்பார். மே தினத்தை வாழ்த்தி முதன்முதலில் கவிதை எழுதியவர் தமிழ்ஒளி. அந்தப் பாடல் அனைவரிடமும் சென்று சேர வேண்டும். பொருளாதார சமத்துவம், சமூக சமத்துவமும் இணைந்தால்தான் முன்னேற முடியும். அத்தகைய சிந்தனை யோடு கவிதைகளை எழுதியவர் தமிழ்ஒளி. அந்த உணர்வுகளை இளை ஞர்கள் பெற வேண்டும். நவீன அறி வியல் வளர்ச்சியை பயன்படுத்தி தமிழ் ஒளி கருத்துக்களை இளைஞர்களிடம் கொண்டு செல்ல வேண்டும்.
ட்டத்திலும், தமிழ்ஒளி படைப்புகளை கொண்டு வந்து மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும். அதற்கு முன்னோடி யாக சென்னைப் பல்கலைக் கழகம் தனது பாடத்திட்டத்தில் தமிழ்ஒளி படைப்பு களை கொண்டு வர வேண்டும். கடந்த கால வரலாற்றை மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். வகுப்பு களில் பாடத்தோடு, பொது அறிவையும், சமூக வரலாற்றையும், சமூக உணர்வை யும், தமிழ், தமிழ்மொழி குறித்த வர லாற்றையும், எதிர்கால வாழ்க்கை குறித்தும் பேராசிரியர்கள் கற்பிக்க வேண்டும். தந்தை பெரியார், அண்ணா, கலை ஞர், காரல் மார்க்ஸ், அம்பேத்கர் போன் றோரை மாணவர்களுக்கு சொல்லித்தர வேண்டும். யார் ஆட்சி செய்தாலும் தமிழ் உணர்வு மங்காமல் இருக்க வேண்டும். ஆணும் பெண்ணும் சமம். பகுத்தறிவு, சமத்துவக் கொள்கைகளை வளர்க்க வேண்டும். கலைஞர் நூற்றாண்டும், தமிழ்ஒளி நூற்றாண்டும் ஒரேஆண்டில் நடைபெறு வது மகிழ்ச்சியளிக்கிறது. திருவள்ளுவர், ஒளவை, அண்ணா, கலைஞர் போன்று தமிழ்ஒளி புகழும் நிலைத்து நிற்கும்.இவ்வாறு அவர் பேசினார்.
கலைஞர் நேசித்த கவிஞர்
கவிஞர் தமிழ்ஒளி நூற்றாண்டு விழாக்குழு தலைவர் சிகரம் ச.செந்தில் நாதன், நிகழ்வுக்கு தலைமை தாங்கினார். அவர் பேசுகையில், வறுமையிலும் மிக மோசமான வறுமையில், சமூகத்தால் நிராகரிக்கப்பட்டவராக தமிழ்ஒளி இருந்தார். அவருடைய புகழை நிலை நிறுத்த அரசு கைகொடுத்துள்ளது. அரசு மார்பளவு சிலை வைப்பதாக அறிவித்துள் ளது. அது முழு உருவச் சிலையாக இருந் தால் கூடுதல் மகிழ்ச்சி தரும் என்றார். கலைஞர் கருணாநிதி, தமிழ்ஒளி மீது மிகுந்த மரியாதை கொண்டிருந்தார்; நேசித்தார். தமிழ்ஒளி உடல் நிலை மிக மோசமாக இருந்தபோது, அரசு மருத்துவ மனையில் சென்று சிகிச்சை பெற, கலைஞர் கருணாநிதி பரிந்துரை கடிதம் எழுதி திருச்சி தியாகராஜன், கவிஞர் சுராதா விடம் கொடுத்துள்ளார். ஆனால், அவர் களால் தமிழ்ஒளியை கண்டுபிடிக்க முடிய வில்லை. எனவே, கடிதத்தை முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமியிடம் கொடுத்துள்ளனர். 10 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்ஒளி பற்றி, கலைஞர் கருணாநிதி கவிதை எழுதி முரசொலியில் வெளி வந்தி ருக்கிறது. அந்த கடிதத்தையும், கவிதை யையும் கண்டுபிடிக்க வேண்டும் என்று குறிப்பிட்டார் என்றும் அவர் கூறினார்.அமைச்சரை மீண்டும் சந்திப்போம். மேலும் சில கோரிக்கைகளை வைப் போம். அவற்றை நிறைவேற்றித் தர வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
100 இடங்களில்...
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் -கலைஞர்கள் சங்கத்தின் பொதுச் செய லாளர் ஆதவன் தீட்சண்யா பேசும் போது, “கவிஞர் தமிழ்ஒளியின் பிறந்தநாளை 1999ஆம் ஆண்டிலிருந்து புதுச்சேரி அரசு, அரசு விழாவாக கொண்டாடி வரு கிறது. அதேபோன்று தமிழக அரசும் பிறந்தநாள், இறந்தநாளை அரசு நிகழ்வாக நடத்த வேண்டும்” என்று கோரி னார். “கவிஞர் தமிழ்ஒளியின் நூற்றாண்டையொட்டி, அவரின் படைப்பு களை முன்வைத்து 100 இடங்களில் தமுஎகச சார்பில் நிகழ்வுகளை நடத்த உள்ளோம். இதன் முதல் நிகழ்வுகள் செப்.30 அன்று புதுச்சேரியில் நடைபெறு கிறது” என்று அவர் தெரிவித்தார். இந்நிகழ்வில், கவிஞர் தமிழ்ஒளி நூற்றாண்டு விழாக்குழு செயலாளர் இரா.தெ.முத்து, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் துணைத்தலைவர் முனைவர் இ.சுந்தரமூர்த்தி, பல்கலைக் கழக பதிவாளர் பேரா.ஏழுமலை, விழாக்குழு உறுப்பினர் பத்திரிகையாளர் மயிலை பாலு உள்ளிட்டோர் பேசினர்.