tamilnadu

img

விவசாயிகள் - தொழிலாளர் போராட்டம் தீவிரமடையும்!

காஞ்சிபுரம்,ஜூன் 1 மோடி அரசின் நவீன தாராள மயப் பொருளாதாரக் கொள்கை களை  எதிர்த்து தொழிலாளர்களு டன் இணைந்து வலுவான போரா ட்டங்களை நடத்தவேண்டியது அவ சியம் என்று அகில இந்திய விவசாயி கள் சங்கத்தின் துணைத்தலைவரும் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பின ருமான ஹன்னன் முல்லா  கூறி னார். இந்தியாவில் விவசாயிகளின் விடிவெள்ளியாக திகழும் அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் தேசிய செயற்குழு கூட்டம்,  கோவில் நகரமான  காஞ்சிபுரத்தில் வியாழ னன்று (ஜூன் 1) துவங்கியது. இரண்டு நாட்கள் நடைபெறும் இக்கூட்டத்தில் சங்கத்தின் கொடி யை ஏற்றிவைத்து அகில இந்திய துணைத்தலைவர் ஹன்னன் முல்லா பேசியதன் சுருக்கம் வருமாறு: தேசிய அளவில் விவசாயிகள் விவசாயத் தொழிலாளர்கள் உள்பட அனைத்து தரப்பு மக்களின்  நிலை மை மிக மோசமாக உள்ளது.  ஒன்றிய பாஜக அரசின் விவசாயிகள் விரோத, மக்கள் விரோத கொள்கைகளை எதிர்த்து விவசாயிகளை அணி திரட்டும்  மகத்தான பணியில் அகில  இந்திய விவசாயிகள் சங்கம் ஈடுபட்டுள்ளது. 

நாட்டின் அரசியல் சமூகம், பொருளாதாரம் என அனைத்து தளங்களையும் நாசம் செய்து வரும்  ஒன்றிய பாஜக அரசை எதிர்த்தும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் பிற்போக்கு கொள்கைகளை எதிர்த்தும் கிராமப்புறங்களில் மிகப் பெரிய அமைப்பாக செயல்பட்டு வரும் அகில இந்திய விவசாயிகள் சங்கம், இந்த கால கட்டத்தில் முக்கியமான பங்களிப்பை ஆற்ற வேண்டியுள்ளது. கிராம அளவில், தாலுகா அளவில், மாவட்ட, மாநில, தேசிய அளவில் மக்களை திரட்டி போராட்டங்களை நடத்தும் போது ஒன்றிய அரசின் மக்கள் விரோத கொள்கைகளால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை மக்களை உணரச் செய்வது மிக அவசியம். அப்போது தான் நாம் நடத்தும் இயக்கத்தின் உண்மையான நோக்கம் நிறைவேறும்.

யாரும் தப்பவில்லை

நரேந்திர மோடி அரசின் தாக்குதலில் இருந்து  சமூகத்தில் எந்த ஒரு பிரிவினரும்  தப்பவில்லை. நாட்டில் வறுமை அதிகரிக்கிறது,  ஏழை மக்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. மக்களின் அன்றாட வாழ்க்கை பேராபயத்தில் உள்ளது. விவசாய கூலித்தொழிலாளர்களின் நிலையும் மிக  மோசமாக உள்ளது. மோடி அரசின் விவசாயிகள்  விரோதக்  கொள்கைகள் அனைத்தும் கிராமப்புற பொருளாதாரத்தை சூறையாடி வருகிறது.  விவசாயிகள், விவசாய  தொழிலாளர்கள் மட்டுமல்ல ஆலைத் தொழிலாளர்களும், பெண் ஊழியர்களும்  பாதிக்கப்பட்டுள்ளனர். தொழிலாளர் நலச்சட்டங்களை  நீர்த்துப்போகச்செய்யும் வகையில் அவற்றை நான்கு தொகுப்புகளாக அரசு மாற்றியுள்ளது. இதை  எதிர்த்து இந்திய தொழிலாளி வர்க்கம்  கடுமையாக  போராடி வருகிறது. எனவே விவசாயிகளை  பாதுகாப்பதற்கான போராட்டத்தோடு அனைத்துதரப்பு  மக்களையும் பாது காப்பதற்கான இயக்கங்களை கட்டமைப்பதும் அவசியம். 

ஒன்றுபட்ட போராட்டம்

ஆனால் நமது அன்றாட வாழ்வில் அரசியல், பொருளா தாரம், சமூகம் என அனைத்தையும் நவீன தாராளமய பொருளாதார கொள்கைகள்  தீர்மானிக்கக்கூடிய நிலை ஏற்பட்ட பின்னர்  நம்முடன் இணைந்து போராட பல்வேறு தரப்பட்ட  அமைப்புகள் முன்வந்துள்ளன. இந்த ஒற்றுமை யை மேலும் பலப்படுத்தி நரேந்திரமோடி அரசின் நவீன தாராளமய பொருளாதாரக் கொள்கைகளை  எதிர்த்து ஜனநாயக ரீதியிலான இயக்கங்களை வலுவாகவும் விரிவாகவும் நடத்த வேண்டியது மிகமிக அவசியமாகும். இவ்வாறு ஹன்னன் முல்லா   பேசினார். இந்த கூட்டத்தில் அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின்  தலைவர் டாக்டர் அசோக் தாவ்லே, பொதுச்செயலாளர் விஜூ கிருஷ்ணன், நிதிச்செயலாளர் பி.கிருஷ்ணபிரசாத், துணைத்தலைவர் பெ.சண்முகம், துணைச்செயலாளர் டி.ரவீந்திரன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுச்செய லாளர் சாமி நடராஜன், மாநில பொருளாளர் கே.பி.பெரு மாள், மாநிலத்துணைத்தலைவர் பி.டில்லிபாபு உள்ளிட்ட தேசிய செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர். முன்னதாக இந்தகூட்டத்திற்கு வந்த அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் தலைவர்களை சிஐடியு மாவட்டத் தலைவர்  இ.முத்துக்குமார், செயலாளர் கே.நேரு, பொருளாளர் என்.சாரங்கன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.