நெல்லை,டிச.23- தமிழகத்தில் டிசம்பர் 25 ஆம் தேதி முதல் ஜனவரி 2 ஆம் தேதி வரை பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை வழங்கப்படுவதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி தெரிவித்துள்ளார். திருநெல்வேலியில் பள்ளி கட்டிடம் இடிந்து மூன்று மாணவர்கள் பலியான பள்ளியை வியாழக்கிழமை(டிச.23) அதி காரிகளுடன் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி ஆய்வு செய்தார். அப்போது செய்தி யாளர்களிடம் அரையாண்டு விடுமுறை குறித்த அறிவிப்பை அமைச்சர் அறி வித்தார். இதுகுறித்து அவர் கூறும்போது “டிசம்பர் 25 ஆம் தேதி முதல் ஜனவரி 2 ஆம் தேதிவரை பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை வழங்கப்படு கிறது. மாணவர்கள் பேருந்து படிக்கட்டுக ளில் நின்று பயணம் செய்வதை தடுக்க கதவுகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார். பள்ளி மாணவர்களுக்கு கிறிஸ்துமஸ், அரையாண்டு விடுமுறைவிட வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு, ஆசிரியர் அமைப்பு வேண்டுகோள் விடுத்திருந்த நிலையில் தற்போது இந்தத் தகவலை அமைச்சர் தெரிவித்துள்ளார்.