tamilnadu

img

இலங்கைத் தமிழர்களுக்கு அரசு உதவி செய்யும்: அமைச்சர்

வேலூர், செப்.6 - இலங்கைத் தமிழர்கள் மீண்டும் இலங்கைக்கு செல்ல விருப்பம் தெரிவித் தால் அதற்கேற்ப சொந்த நாட்டிற்கு அனுப்பி வைக்க  தமிழக அரசு தகுந்த நடவடிக்கை எடுக்கும் என்று மாநில சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் வெளி நாடுவாழ் தமிழர் நலத் துறை  அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் தெரிவித்தார். வேலூர் அருகே உள்ள  மேல் மொணவூர் இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமில் ரூ. 11 கோடியில் கட்டப்பட்டு வரும் 220 வீடு களின் கட்டுமான பணிகளை  அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்க ளிடம் பேசிய அமைச்சர், “முதற்கட்டமாக இலங்கை தமிழர்களுக்கு  7ஆயிரம் குடும்பங்களுக்கு ரூ.317 கோடியில் வீடுகள் கட்டப் பட்டு வருகிறது” என்றார். திண்டுக்கல்லில் கட்டப் பட்டுள்ள குடியிருப்புகளை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்  விரைவில் திறக்க  உள்ளதாகவும் அமைச்சர் கூறினார். இலங்கை வாழ் தமிழர்க ளுக்கு குடியுரிமை பெற  ஒன்றிய அரசிடம் தமிழக  அரசு தொடர்ந்து வலியு றுத்தி வருகிறது என்றும் இலங்கைத் தமிழர்கள் மீண்டும் இலங்கைக்கு செல்ல விருப்பம் தெரிவித் தால் அதற்கேற்ப சொந்த நாட்டிற்கு அனுப்பி வைக்க தகுந்த நடவடிக்கை எடுக் கும் என்றும் அமைச்சர் மஸ்தான் தெரிவித்தார். இந்த ஆய்வு பணியின் போது மாவட்ட ஆட்சியர்  பெ.குமாரவேல் பாண்டி யன், சட்டமன்ற உறுப்பினர் கள் ஏ.பி.நந்தகுமார் உள் ளிட்டோர் உடனிருந்தனர்.

;