வெள்ளி, பிப்ரவரி 26, 2021

tamilnadu

மருந்தாளுநர்களை கண்டுகொள்ளாத அரசு கண்ணீர் வடிக்கும் ஊழியர்கள்

மதுரை:
மக்கள் நல்வாழ்வுத் துறையில்  காலியாகவுள்ள மருந்தாளுநர் பணியிடங்களை மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் நிரப்ப வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருந்தாளுநர் பணி நேரம் காலை ஒன்பது மணி முதல்நான்கு மணி வரை என்பதை நடைமுறைப்படுத்த வேண்டும்.

வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் பரிந்துரைக்கப்பட்டு  பணி நியமனம் செய்யப்பட்டு எட்டு ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பு ஊதியத்தில் பணியாற்றும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய மருந்தாளுநர்களை  பணிவரன்முறை செய்ய வேண்டும்.கொரோனா தொற்றால் உயிரிழந்த மருந்தாளுநர் குடும்பங்களுக்கு   முதல்வர் அறிவித்த ரூபாய் ஐம்பது லட்சம் இழப்பீடு, குடும்ப வாரிசுதாரருக்கு கருணைஅடிப்படைல் அரசுப் பணி வழங்க வேண்டும். நோயாளிகள் எண்ணிக்கைக்கேற்ப கூடுதல் மருந்தாளுநர் பணியிடங்களை  உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்டகோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமென தமிழக அரசையும், முதல்வரையும் அனைத்து மருந்தாளுநர்கள், தலைமை மருந்தாளுநர்கள், மருந்துக் கிடங்கு பணியாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.சட்டமன்றக்கூட்டத்தொடரில் இப்பிரச்சனைக்கு தீர்வுகாண வேண்டுமென அமைப்பின் மதுரை புறநகர் மாவட்டத் தலைவர்.என்.சுமதி, செயலாளர் அ.தமிழ்ச்செல்வி, மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் பாஸ்கர் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.

;