சென்னை,டிச.23- தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் செயல்படுத்தப்படும் அடுக்குமாடி குடியிருப்பு திட்டங்களில் பயனாளிகளால் செலுத்தப்பட வேண்டிய பங்களிப்பு தொகை செலுத்துவதில் சிரமங்கள் இருந்து வருகிறது. இதனை போக்கும் வகையில், ஏழை எளிய மக்களின் நீண்ட நாள் கோரிக்கையினை ஏற்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பயனாளிகள் செலுத்த வேண்டிய பங்களிப்புத் தொகையை குறைத்தும், நீண்டகால சுலப தவணைகளில் செலுத்த ஏற்பாடு செய்தும் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாட்டில் குடிசைப் பகுதிகளில் வாழும் ஏழை மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த கலைஞரால் 1970-ஆம் ஆண்டு நாட்டிலேயே முதன் முதலாக தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம் உருவாக்கப்பட்டது. இதனால் பல்லாயிரக்கணக்கான குடிசைவாழ் மக்கள் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வாழக்கூடிய வழிவகை ஏற்பட்டது. அதன் தொடர்ச்சியாக, குடிசைகளில் வாழும் மக்களுடைய வாழ்வாதாரத்தையும், வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்திட ‘தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம்’ என்று பெயர் மாற்றம் செய்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
தமிழ்நாட்டை 2031-ஆம் ஆண்டிற்குள் குடிசைகள் இல்லாத மாநிலமாக மாற்ற திட்டமிட்டு அதற்கான பணிகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது. அதன்படி, 9.53 லட்சம் ஏழை மக்களுக்கு அடுத்த 10 ஆண்டுகளில் வீடுகள் வழங்கத் திட்டமிடப் பட்டுள்ளது. மறுகட்டுமான குடியிருப்புகள் மறுகட்டுமான குடியிருப்புகள் ஒதுக்கீடு பெறும் பயனாளிகள் செலுத்த வேண்டிய பங்குத்தொகை மிக அதிகளவில் இதுவரை இருந்து வந்த நிலையில், அத்தொகையை வெகுவாகக் குறைத்து, அதனையும் தவணை முறையில் செலுத்துவதற்கான வழிமுறைகளை உள்ளடக்கி, தற்போது அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, பயனாளிகள் செலுத்த வேண்டிய பங்களிப்பு தொகையானது மாதம் ஒன்றுக்கு ரூ.250 முதல் ரூ.500 வரை செலுத்தலாம்.
குறிப்பாக, 100 விழுக்காடு கட்டி முடிக்கப்பட்ட, கட்டப்பட உள்ள திட்டப் பகுதிகளில் சென்னை மற்றும் இதர நகரங்களில் மாதம் ரூ.250 என்றும் 60 முதல் 100 விழுக்காட்டிற்கு கூடுதலாக குடியிருப்பு கள் கட்டி முடிக்கப்பட்ட, கட்டப்படவுள்ள திட்டப்பகுதிகளில் செலுத்தப்பட வேண்டிய பங்களிப்புத் தொகை சென்னையில் மாதம் ரூ.400 மற்றும் இதர நகரங்களில் மாதம் ரூ.300 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 30 முதல் 60 விழுக்காட்டிற்குட் பட்ட கூடுதல் குடியிருப்புகள் கட்டி முடிக்கப் பட்ட, கட்டப்படவுள்ள திட்டப் பகுதிக ளில் செலுத்தப்பட வேண்டிய பங்களிப்புத் தொகை சென்னையில் மாதம் ரூ.500 மற்றும் இதர நகரங்களில் மாதம் ரூ.400. 30 விழுக்காட்டிற்கு குறைவான கூடுதல் குடியிருப்புகள் கட்டி முடிக்கப்பட்ட, கட்டப்படவுள்ள திட்டப்பகுதிகளில், ரூ.1.50 லட்சம் அல்லது திட்ட மதிப்பீட்டில் 10 விழுக்காடு இவற்றில் குறைவான தொகையை சென்னை நகரத்திற்கும், ரூ.1.00 லட்சம் அல்லது திட்ட மதிப்பீட்டில் 10 விழுக்காடு இவற்றில் குறைவான தொகையை இதர நகரங்களுக்கு நிர்ணயம் செய்யப்பட்டு, 20 ஆண்டுகளில் சுலப மாதத் தவணை யாக செலுத்தலாம். மேலும், தவணைத் தொகையினை தவறாமல் செலுத்தும் பயனாளிகளுக்கு பகுதி வட்டித் தொகை திரும்ப வழங்கப்படும்.
ஆக்கிரமனதாரர்கள்
மறுகட்டுமான திட்டப்பகுதியில் உள்ள ஆக்கிரமனதாரர்கள் ரூ.1.50 லட்சம் முதல் ரூ.5.68 லட்சம் வரை செலுத்த வேண்டியிருந்தது. தற்போது, சென்னை யில் உள்ள பயனாளிகளுக்கு ரூ1.50 லட்சமும் மற்றும் இதர நகரங்களில் உள்ள பயனாளிகளுக்கு ரூ.1 லட்சமும் பயனாளிகளின் பங்களிப்புத் தொகையாக ஒரே சீராக நிர்ணயம் செய்து, 20 ஆண்டு களில் சுலப மாத தவணையாக செலுத்த லாம்.
பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவு
மறுகட்டுமான திட்டப்பகுதியில் கட்டப்படும் குடியிருப்புகளில் பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவு பயனாளிகளுக்கு ரூ.49 ஆயிரம் முதல் ரூ.6.20 லட்சம் வரை செலுத்த வேண்டி இருந்தது. தற்போது, சென்னை மற்றும் இதர மாநகராட்சிகள், நகராட்சிகள், பேருராட்சிகள்) பயனாளிகள் பங்க ளிப்புத் தொகை நிர்ணயம் செய்யப்படும். மேலும், பயனாளிகள் பங்களிப்புத் தொகை அதிகமாக இருக்கும் பட்சத்தில், பொதுவான உள்கட்டமைப்பு வசதிக ளுக்கான தொகை பயனாளிகளிடமிருந்து பெறப்படமாட்டாது.
வசிப்பிடத்திலேயே...
குடிசைப்பகுதி வாழ் குடும்பங்களுக்கு அவர்கள் வசிக்கும் அதே இடங்களில் குடியிருப்பு கட்ட, திட்டமதிப்பீட்டு தொகையிலிருந்து அரசு மானியம் போக மீதம் உள்ள தொகை பயனாளிகளின் பங்க ளிப்பு தொகையாக நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. தற்போது, ரூ.1.50 லட்சம் அல்லது 10 விழுக்காடு திட்ட மதிப்பீடு இவற்றில் குறைவான தொகையை சென்னை நகரத்திற்கும், ரூ.1 லட்சம் அல்லது 10 விழுக்காடு திட்ட மதிப்பீடு இவற்றில் குறை வான தொகையை இதர நகரங்களுக்கும் நிர்ணயம் செய்து 20 ஆண்டுகளில் சுலப மாத தவணையாக பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.
புதிய பகுதிகளில்...
புதிய பகுதிகளில் கட்டப்படும் குடியி ருப்புகளில் பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினர்கள் முன்பு ரூ.68 ஆயிரம் முதல் ரூ.6.48 லட்சம் வரை செலுத்த வேண்டிய நிலை இருந்தது. தற்போது, சென்னை மற்றும் இதர மாநகராட்சிகள், நகராட்சிகள், பேருராட்சிகள்) பயனாளிகள் பங்களிப்புத் தொகை நிர்ணயம் செய்யப்படும். மேலும், பயனாளிகள் பங்களிப்புத் தொகை அதிகமாக இருக்கும் பட்சத்தில், பொது வான உள்கட்டமைப்பு வசதிகளுக்கான தொகை பயனாளிகளிடமிருந்து பெறப்பட மாட்டாது.
மீதமுள்ள குடியிருப்புகள்
தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் கட்டப்பட்டு, ஒதுக்கீடு செய்யப்பட்ட குடியிருப்புகள் போக மீதமுள்ள குடியிருப்புகள் பொருளா தாரத்தில் நலிவுற்ற பிரிவினருக்கு வழங்கப்படும். இதுதொடர்பாக நாளி தழ்களில் விளம்பரம் செய்து பொது மக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெற்று மாவட்ட ஆட்சியரை கலந்தா லோசித்து பயனாளிகளின் பட்டியல் இறுதி செய்யப்படும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.