tamilnadu

img

பொற்பனைக்கோட்டை அகழாய்வில் தங்க அணிகலன்கள் கண்டெடுப்பு

புதுக்கோட்டை, ஜூலை 8- புதுக்கோட்டையை அடுத்த பொற்பனைக்கோட்டை அக ழாய்வில் சங்க காலத்தைச் சேர்ந்த  தங்க அணிகலன்கள் கிடைத்துள் ளன. இது முக்கியமான கண்டெ டுப்பாக தொல்லியல் ஆய்வாளர் களால் கருதப்படுகிறது.  இதுகுறித்து தமிழ்நாடு அர சின் தொல்லியல் துறை தெரிவித்தி ருப்பதாவது: தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை பொற்பனைக்கோட்டையில் தொலைநிலை உணர்திறன் முறை யான கண்டறிதல் மற்றும் வரம்பு (LIDAR) மூலம் ஆய்வுகள் மேற் கொள்ளப்பட்டு வருகிறது. 44.88 ஏக்கர் பரப்பளவு கொண்ட பொற்ப னைக்கோட்டையில் 3.11 ஏக்கர் பரப்பளவில் வாழ்விடம் இருந்தது கண்டறியப்பட்டது. தமிழக அரசு தொல்லியல் துறை சார்பில் மனித வள மேலாண்மை மற்றும் தொல்லி யல் துறை அமைச்சர் தங்கம் தென்ன ரசு, அகழாய்வு பணியினை கடந்த  மே 20 ஆம் தேதி தொடங்கி வைத்தார். அகழாய்வு தொடங்கிய சில  நாட்களிலேயே A1 எனும் குழியில் 19 செ.மீ ஆழத்திற்குள்ளாகவே செங்  கல் கட்டுமானம் வெளிப்பட்டது. இதுவரை, வட்டச்சில்லுகள்-49, கென்டி மூக்குகள்-2, கண்ணாடி வளையல்கள்-4, கண்ணாடி மணி கள்-95, சுடுமண் விளக்கு-1, தக்களி கள்-2, காசு-1, சூதுபவள மணி-1,  மெருகேற்றும் கற்கள்-2 என 159 தொல்பொருட்களும், கீறல் குறி யீடு 2-ம் கிடைத்துள்ளது குறிப்பிடத்  தக்கது. 

மேலும், மெருகேற்றப்பட்ட பீங் கான் பானை ஓடுகள், கருப்புநிற பானை ஓடுகள், கறுப்பு- சிவப்புநிற பானை ஓடுகள், கூரை ஓடுகள், துளையிடப்பட்ட பானை ஓடுகள்-2 என பல்வேறு வகையான பானை ஓடுகளும் கிடைத்துள்ளன. அதனைத் தொடர்ந்து பல்வேறு தொல்பொருட்கள் கிடைத்துவரும் நிலையில் சனிக்கிழமை நடை பெற்ற அகழாய்வில், மூன்று முக்கி யத்துவம் வாய்ந்த தொல்பொருட் கள் கிடைத்துள்ளன. H2 எனும் குழி யில் 133.செ.மீ. ஆழத்தில் ஆறு இதழ்  கொண்ட தங்க மூக்குத்தி-தோடு ஒன்றும், B1 எனும் குழியில் 140 செ.மீ.  முதல் 145 செ.மீ. ஆழத்தில் எலும்பு  முனை கருவி மற்றும் வட்ட வடிவ  சிவப்பு நிறமுடைய 150 செ.மீ. முதல்  160 செ.மீ. ஆழத்தில் கார்னீலியன் பாசி மணி ஒன்றும் கிடைத்துள்ளது.  எலும்பு முனை கருவி நூல் நூற்பதற்காக நெசவு தொழிலுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. கார்னீ லியன் கற்கள் வட இந்தியாவில், குறிப்பாக குஜராத் மாநிலத்தில் மட்டுமே கிடைக்கக்கூடியது. தற்  போது இங்கு கிடைத்துள்ள வட்ட  வடி விலான சூதுபவள மணியானது கார்னீலியன் கற்களால் உருவாக் கப்பட்டுள்ளது. 

தற்போது கிடைத்திருக்கும் சூதுபவள மணியானது வரலாற்று  தொடக்க காலத்தில் இருந்த உள்  நாட்டு வணிகத்தை எடுத்துக்காட் டும் வகையில் அமைந்துள்ளது. ஆறு இதழ் கொண்ட, 0.26 கிராம் எடையுடைய தங்க மூக்குத்தி-தோடு  கிடைத்திருப்பது சங்க காலத்தின்  வரலாறு மற்றும் பண்பாட்டின் முக்கி யத்துவத்தை வெளிப்படுத்துவதாக அமைகிறது. பொற்பனைக்கோட்டை அக ழாய்வானது 3.11 ஏக்கர் பரப்பளவு கொண்ட அரண்மனைத்திடல் வாழ்விட பகுதியில் இதுவரை 5  மீட்டர் நீள அகலத்தில் 8 குழிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டு வருகிறது. சுந்தரராஜன் என்பவர் நிலத்தில் 4 குழிகளும், மாரிமுத்து, கருப் பையா, பழனியப்பன், ரெங்கசாமி ஆகியோரின் நிலத்தில் தலா 1 குழி களும் தோண்டப்பட்டு வரு கின்றன.  அகழாய்வு பணிக்கு 35 பணி யாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அகழாய்வு இயக்குநர் தங்கதுரை தலைமையில் ஆய்வு மாணவர்கள்  சுதாகர், முனுசாமி, பாரத் ஆகி யோர் கொண்ட குழுவினரால் இந்த