tamilnadu

img

“யூத இனவெறி அரசுடன் உறவாடும் மோடி அரசு இந்தியாவிற்கே இழுக்கு!”

சென்னையிலி ருந்து கடந்த ஏப்  ரல் 8 அன்று இஸ்ரேலை நோக்கி புறப்பட்ட டென் மார்க் நாட்டை சார்ந்த மரி யான் டேனிகா என்கிற சரக்குக் கப்பலில், சென்  னையை சேர்ந்த சித்தார்த்தா லாஜிஸ்டிக்ஸ் நிறுவனம் தனது கண் டெய்னர்கள் மூலம் சுமார் இருபத்தி ஏழு டன் ஆயுதங்களை இஸ்ரேலுக்கு அனுப்பியுள்ளது. இச்சரக்குக் கப்பல் ஸ்பெயின் நாட்டின் கர்ட ஜெனா துறைமுகத்தில் வரும் 21 அன்று நின்று செல்ல அனுமதி கோரியபோது ஸ்பெயின் அரசு  மேற்கொண்ட ஆய்வில், கப்பலில் ஆயுதங்கள் இருப்பது கண்டறிப்பட்டுள்ளது. ஸ்பெயின் நாட்டின் இடதுசாரிகள் கொடுத்த அழுத்தத்தின் விளைவாக, அக்கப்பலை அங்கு நிறுத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இது ஸ்பெயினின் கொள்கை முடிவு என்று அந்த அரசு தெரிவித் துள்ளது.  “மத்திய கிழக்கு நாடுகளுக்கு மேலும் ஆயு தங்கள் தேவையில்லை.  அங்கு அமைதிதான் வேண்டும்”  என்று ஸ்பெயின் வெளியுறவு துறை அமைச்சர் ஜோஸ் மேனுவல்  தெரிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. இந்த நிலையைத் தான் இந்திய அரசும் எடுத்திருக்க வேண்டும். கெடு வாய்ப்பாக, தற்போது ஆட்சிப்பொறுப்பில் உள்ள விரைவில் தூக்கி எறியப்படவுள்ள, பாஜக அரசு இஸ்ரேலின் தீவிர வலதுசாரி யூத இனவெறி அரசுக்கு நெருங்கி உறவாடுகிறது.  இந்தியாவிலிருந்து இஸ்ரேலுக்கு கொண்டு சொல்லப்பட்டுள்ள ஆயுதங்கள் குறித்து இதுவரை இந்திய அரசு எவ்வித விளக்கமும் அளிக்காதது அதிர்ச்சியளிக்கிறது. மற்ற நாடுகளின் இறை யாண்மைக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் இந்தியாவிலிருந்து ஆயுதங்கள் பயணப்படுவது கண்டனத்துக்குரியதாகும். பாலஸ்தீன மக்க ளுக்கு எதிரான நிலையை பலமுறை பாஜக அரசு எடுத்த போதும் இந்திய மக்களின் போராட்டத்தின் விளைவாக, இறுதியில், இஸ்ரேலுக்கு எதிரான ஐ. நா தீர்மானத்தை இந்தியா ஆதரித்தது.  ஆனால், இஸ்ரேல் இந்தியாவின் நட்பு நாடு என்று சொல்லிக்கொண்டே, ஐ.நா. பாதுகாப்பு அதி காரியாகப் பணிபுரிந்து வரும் முன்னாள் இந்திய ராணுவ அதிகாரியை இஸ்ரேல் ராணுவம் படு கொலை செய்கிறது. இதைக் கூட கண்டித்து பிரத மர் மோடியோ, இந்திய வெளியுறவுத் துறையோ வாய் திறக்கவில்லை இந்திய அரசு மறைமுகமாக இஸ்ரேலுக்கு ஆத ரவாக இதுபோன்ற தனியார் நிறுவனங்கள் மூலம்  ஆயுதங்களை  அனுப்புவது நமது நாட்டின் பாரம் பரியத்திற்கே இழுக்காகும். பாஜக அரசின் ஆதரவு இல்லாமல் இப்படியான ஆயுத வியாபாரம் நடப்ப தற்கு சாத்தியமே இல்லை. பாதிப்புக்கு உள்ளாகி யுள்ள பாலஸ்தீன மக்களுக்கு மேலும் தீங்கு விளைவிக்கும் வகையில் செயல்படும் பாஜக அரசின் இஸ்ரேல் ஆதரவுப் போக்கு மீண்டும் இதன்  மூலம் நிரூபணம் ஆகியுள்ளது. இது இந்திய மக்க ளின் உணர்வுகளுக்கு நேர் எதிரான செயலாகும்.  இஸ்ரேலுக்கு ஆயுதங்களை கொண்டு செல்லும் மரியான் டேனிகா சரக்குக் கப்பலை உட னடியாக திரும்பி அழைக்க வேண்டும். சரக்கு என்ற  பெயரில் ஆயுதங்களை ஏற்றுமதி செய்துள்ள சித்தார்த்தா லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தை உடனடி யாக மூடி சீல் வைத்திட வேண்டும். இந்த நட வடிக்கை குறித்த உரிய விசாரணை மேற் கொண்டு சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் உரிய நட வடிக்கை மேற்கொள்ள வேண்டும். பாதிக்கப்பட் டுள்ள பாலஸ்தீன மக்களுக்கு தேவையான உதவி களை வழங்கிட இந்திய அரசு உடன் ஏற்பாடுகள் செய்திட வேண்டும்.

சிபிஎம் தென் சென்னை மாவட்டச் செயலாளர் 
இரா.வேல்முருகன் வெளியிட்டுள்ள 
கண்டன அறிக்கையிலிருந்து...

;