இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூத்த தலைவரும் கேரள முன்னாள் முதலமைச்சருமான இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட் நினைவு தினத்தை முன்னிட்டு சட்டப்பேரவை எதிரே உள்ள இ.எம்.எஸ் பூங்காவில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்ச்சியில் முதல்வர் பினராயி விஜயனுடன் திருவனந்தபுரம் மக்களவைத் தொகுதி இடது ஜனநாயக முன்னணி (எல்.டி.எப்) வேட்பாளர் பன்னியன் ரவீந்திரன் கலந்துகொண்டார். கடகம்பள்ளி சுரேந்திரன் எம்.எல்.ஏ., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் எம்.வி.கோவிந்தன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் எம்.ஏ.பேபி, மாநிலச் செயற்குழு உறுப்பினர் அனாவூர் நாகப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.