இராமேஸ்வரம், டிச.22- இலங்கைக் கடற்படையினர் 68 மீனவர்கள் மற்றும் அவர்களது 10 படகு களை சிறைப்பிடித்துள்ளனர். அவர் களை விடுவிக்க வலியுறுத்தி இராமேஸ் வரத்தில் மீனவர்கள் புதனன்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி னர். இலங்கைக் கடற்படையினரால் 68 மீனவர்கள் மற்றும் அவர்களது 10 படகுகளை சிறைப்பிடித்துள்ளனர் என்பதை இந்திய வெளியுறுத்துறை செய்தித் தொடர்பாளர் அர்ந்தம் பாக்சி உறுதிப்படுத்தியுள்ளார். இது குறித்து அவர் செவ்வாயன்று கூறியதாவது:- தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்களை இலங்கை அதிகாரி கள் பிடித்து வைத்திருப்பது கவலை யளிக்கிறது. யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரக அதிகாரிகள் தமிழக மீனவர்களைச் சந்தித்து தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருகின்றனர்.
குறிப்பாக உடைகள், கழிப்பறைகள், தின்பண்டங்கள், உலர் அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்துள்ளனர். உறவினர்களுடன் எந்தப்பிரச்சனையும் இன்றி தொடர்பு கொள்வதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உடல் நலக்குறைவால் பாதிக்கப் பட்ட ஒரு மீனவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை இந்திய தூதரக அதிகாரி சந்தித்துப் பேசியுள்ளார். இந்திய மீனவர்கள் மற்றும் படகுகளை முன்கூட்டியே விடு விப்பது குறித்து இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இலங்கைக் கடற்படையினர் டிசம்பர் 18, 19, 20 ஆகிய தேதிகளில் 10 படகுகளுடன் ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இராமேஸ் வரம், மண்டபம், ஜெகதாப்பட்டினம் மீனவர்களை சிறைப்பிடித்துள்ளனர்.
அவர்களை விடுவிக்க வலியுறுத்தி இராமேஸ்வரத்தை அடுத்துள்ள தங்கச்சிமடத்தில் மீனவர்கள் உண்ணா விரதப் போராட்டம் நடத்தினர். டிச.31-ஆம் தேதிக்குள் மீனவர்களை விடுவிக்க வேண்டுமெனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களின் குடும்பத்தினரும் போராட்டத்தில் பங் கேற்றனர். அவர்களது குழந்தைகள் தங்கள் “அப்பாக்களை” பார்க்க வேண்டுமென அழுதது பரிதாபமாக இருந்தது. இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான தங்கச்சிமடத்தை சேர்ந்த கிளிப்டஸ் (45) என்பவரது உறவினர் கூறுகை யில்,” அதிகாரிகள் ரோந்து செல்லும் போது தங்கள் படகுகளில் மீன வர்களையும் கூட்டிச் செல்லவேண்டும். அப்போதுதான், கடலில் உள்ள சர்வ தேச எல்லையை மீனவர்கள் அடை யாளம் காண்பது எளிதல்ல என்பது அவர்களுக்குத் தெரியும் என்றார். அனைத்து இயந்திரப் படகு மீனவர் சங்க தலைவர் பி.சேசுராஜா கூறு கையில் “இரண்டு மாதங்களில் மீன வர்கள் இலங்கை சிறையில் இருந்து வெளியே வருவார்கள் என்பது எங்க ளுக்குத் தெரியும். ஆனால் எங்களின் வாழ்வாதாரத்திற்கு அடிப்படையாக உள்ள 10 இயந்திர படகுகளையும் மீட்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறோம்” என்றார்.
மேலும் அவர் கூறுகையில், தமிழக மீனவர் களின் பல படகுகள் இலங்கை கடற்படை யினரால் கைப்பற்றப்பட்டதால் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இலங்கை அரசு ஒப்புக் கொண்டபடி ஏற்கனவே பறிமுதல் செய்யப்பட்டுள்ள தலா ரூ.30 லட்சம் மதிப்பி லான படகுகளை திரும்பத் தரவில்லை. மீனவர்கள் வாழ்வாதாரம் படகுகளை நம்பியே உள்ளது. அவர்களைச் சிறைப்பிடித்து இலங்கைக் கடற்படையினர் அவர்களின் வாழ்வாதாரத்தை பறித்து வருகின்றனர் என்றார். கைது செய்யப்பட்ட மீனவர்களையும், படகுகளையும் டிச.31-ஆம் தேதிக்குள் விடு விக்கவில்லையெனில் 2022-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி ரயில் மறியல் போராட்ட த்தில் ஈடுபடப்போவதாக மீனவர்கள் தெரிவித்தனர்.