tamilnadu

தகுதிக்கேற்ற வேலையை கண்டறிய வேண்டுமா? சிறந்த வேலைவாய்ப்புத் தளங்கள் மூலம் காணுங்கள்

நாட்டில் வேலைவாய்ப்பின்மை நாளுக்குநாள் பெருகிவருகிறது. இதனால் பட்டதாரிகள் தான் படித்த படிப்பிற்கு ஏற்ப வேலைகளை செய்யாமல் கிடைத்த வேலைகளை செய்து வருகின்றனர். முக்கியமாக நாம் படித்த வேலை எங்கே இருக்கிறது, எந்த அடிப்படையில் திறமையாக இருக்கிறது என்பதை கண்டுபிடிக்காமல் திணறுகின்றனர். சமூக வலைதள அறிவிப்புகள் மற்றும் ஊடக அறிவிப்புகள் வாயிலாகவே வேலை தொடர்பான அறிவிப்புகளை காண்கின்றனர். இந்த சிக்கலை போக்க உங்கள் திறமைக்கு ஏற்ற வேலையை கண்டறிவதற்கான சில சிறந்த இணையதளங்கள் பற்றி கீழே கொடுக்கப்பட்டுள்ளன. முக்கியமாக கீழே கொடுக்கப்பட்டுள்ள தளங்களில் பதிவு செய்தால் தானாக வேலைவாய்ப்புகள் உருவாகும்.

நௌக்ரி.காம் (Naukri.com)


இந்தியாவில் 42 நகரங்களில் 56 அலுவலகங்களையும், துபாய், ரியாத், அபுதாபி மற்றும் பஹ்ரைன் ஆகிய இடங்களில் வெளிநாட்டு அலுவலகங்களையும் இயக்குகிறது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தொடர்பான வெளிவாய்ப்புகள் பற்றிய தகவல்கள் மற்றும் பதிவுகளை பதிவு செய்ய உதவியாக இருக்கும்.''

மான்ஸ்டர் (Monster)

இந்திய மக்கள் உட்பட உலகெங்கிலும் உள்ள வேலை தேடுபவர்களுக்கு, ஒரு நன்கு அறியப்பட்ட இணையதளம் மான்ஸ்டர். டச்சு பன்னாட்டு மனித வள ஆலோசனை நிறுவனமான ராண்ட்ஸ்டாட் ஹோல்டிங்கின் துணை நிறுவனமாகும்.

இண்டீட் (Indeed)'

இந்தியாவில் மட்டுமின்றி உலகம் முழுவதிலும் உள்ள வேலைகளைத் தேட பயன்படுகிறது. 

லிங்க்ட்இன் (LinkedIn)

அனைவருக்கும் தெரிந்த பிரபலமான இணையதளம். ஷைன்.காம் (Shine.com). ஆராய்ச்சி, தொழில்நுட்பம் சார்ந்த வேலைகளுக்கு சிறந்த ஆன்லைன் தளமாகும் 8,000க்கும் அதிகமான நிறுவனங்களின் முதலாளிகளுடன் நேரடி தொடர்பில் இருப்பதால் பதிவுகளுக்கு ஏற்ப வேலை கிடைக்கும்.