tamilnadu

img

மாற்று இடமும், இழப்பீடும் வழங்காமல் குடிசைகளை அகற்ற துடிக்கும் ஒப்பந்த நிறுவனம்

மயிலாடுதுறை, டிச.21 - மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் டி.மணல்மேட்டில் உள்ள நான்கு வழிச்சாலை பணி ஒப்பந்த நிறுவன அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்  மற்றும் பாதிக்கப்பட்ட விவசாயிகள் செவ்வாயன்று தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் நடந்து கொண்டி ருக்கும் போதே, ஜேசிபி இயந்திரம் மூலம் விவசாயிகளின்  தோட்டத்தின் வேலிகளை உடைத்தெறிந்து, மரங் களை வெட்டி வீழ்த்திவிட்டு குடிசை களை அகற்ற முயற்சித்ததை அறிந்த போராட்டக் குழுவை சேர்ந்த ஒரு பகுதியினர் அப்பகுதிக்கு வந்து ஜேசி பியை தடுத்து நிறுத்தி சாலை மறி யல் போராட்டத்தில் ஈடுபட்டதால் திருக்கடையூர், டி.மணல்மேடு, வெள்ளக்குளம் பகுதிகள் போர்க்களமாக காட்சியளித்தன. நான்கு வழிச்சாலைக்காக கை யகப்படுத்தப்பட்ட நிலங்களுக் குரிய இழப்பீட்டை இதுவரை வழங்கா மல், சாலை அமையவுள்ள பகுதி யில் உள்ள விளைநிலங்களை அழித்து, ஏழை மக்களின் குடிசை களை அகற்றி அடாவடியான நட வடிக்கைகளில் நெடுஞ்சாலைத் துறையும், வருவாய்த்துறையும், காவல்துறையும் ஈடுபட்டு வரு கின்றன.

இந்நிலையில், சீர்காழி அரு கிலுள்ள சட்டநாதபுரத்திலிருந்து காட்டுச்சேரி அருகேயுள்ள தேவா னூர் பகுதி வரை (30 கிலோமீட்டர் தொலைவு) மட்டும் 500-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு தொகையினை ஒப்பந்த நிறுவனம் வழங்கவில்லை. ஆனால்  காவல்துறையை வைத்துக் கொண்டு, வருவாய்த்துறையினரின் துணையோடு பணி ஒப்பந்த நிறு வனம் விவசாயிகளையும் மக்களை யும் மிரட்டி வருகின்றன. பல்வேறு போராட்டங்களை நடத்தியும் எந்தவித நடவடிக்கை யும் இல்லாத நிலையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் வில்ஸ்பன் ஒப்பந்த பணி நிறுவன அலுவலகம் முன்பு தொடர் காத்திருப்பு போராட்டம் சங்கத்தின் மாவட்டத் தலைவர் டி.சிம்சன் தலை மையில் செவ்வாயன்று  துவங்கி யது. சிபிஎம் ஒன்றிய செயலாளர் கள் ஏ.ரவிச்சந்திரன், கே.பி.மார்க்ஸ்,  கே.அசோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.துரைராஜ், சிபிஎம் மாவட்டச் செயலாளர் பி.சீனிவாசன், விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ஜி.ஸ்டாலின், மாவட்ட தலைவர் காபிரியேல் ஆகி யோர் உரையாற்றினர். பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூட்டமைப்பின் ஏ.ஆனந்தன் மற்றும் விவசாய சங்க மாவட்டக்குழு உறுப்பினர்கள், பாதிக்கப்பட்ட விவ சாயிகள் 500-க்கும் மேற்பட்டோர் சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தரையில் அமர்ந்து, அங்கேயே உணவு சமை த்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தைக்கு வந்த  சீர்காழி கோட்டாட்சியர் நாராயணன், வட்டாட்சியர் ஹரிதரன், டிஎஸ்பி லாமேக் ஆகியோர் ஒப்பந்த நிறு வனத்தின் பிரதிநிதிகள் போலவே பேசியதை ஏற்றுக்கொள்ள மறுத்த போராட்டக் குழுவினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

வேலிகளை நொறுக்கி மரங்களை வெட்டி...

8 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த போராட்டத்தை திசை திருப்பிவிடும் நோக்கில் சாலை அமையவுள்ள வெள்ளக்குளம் பகு தியில், விவசாயிகளின் தோட்ட வேலி களை சுக்குநூறாக உடைத்தெறிந்து, 15 மரங்களை வெட்டி வீழ்த்தினர். ஏழைகளின் குடிசைகளை இடித்து தள்ள முயன்ற நிலையில், தக வலறிந்து வந்த போராட்டக் குழு வின் ஒரு பகுதியினர் சிபிஎம் ஒன்றிய செயலாளர் ஏ.ரவிச்சந்திரன் தலை மையில் ஜேசிபி இயந்திரத்தை விரட்டியடித்து வேப்பஞ்சேரி-திருக்கடையூரில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டங் களை நடத்தி வரும் விவசாயிகளை அலட்சியப்படுத்தும் விதமாகவும், மிரட்டியும் வருவாய்த்துறையினரும், காவல்துறையும் அடக்குமுறையான நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தமிழ்நாடு விவசாயிகள் சங்கமும், போராட்டக் குழுவினரும் வன்மை யாக கண்டித்துள்ளனர். நான்கு வழிச்சாலைக்காக நிலத்தை இழந்த விவசாயிகளுக்கு உரிய நிவாரணத்தை வழங்க வேண்டும். குடியிருப்புகளின் இடங் களை இழந்த குடும்பங்களுக்கு தகுதியுள்ள மாற்று இடம் வழங்க வேண்டும். நிவாரணத்தை வழங்கா மல் பணியை தொடர காவல்துறை மற்றும் அடியாட்களை வைத்து மிரட்டுவதை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டங்கள் தொடரும் என கூறியுள்ளனர்.
 

;