tamilnadu

கொரோனா கால பணியாளர்களுக்கு கூடுதல் மதிப்பெண்

 சென்னை,டிச.2- கொரோனா காலத்தில் அவுட்சோர்சிங் முறையில் பணியாற்றியவர்களுக்கு நடை பெறவுள்ள சுகாதாரப் பணியாளர்கள், ஆய்வாளர்கள் தேர்வில் கூடுதல் மதிப்பெண் அளிக்க வழிவகை செய்யப் ்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணி யன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர் வெளியி டுள்ள அறிக்கை வருமாறு:- கொரோனா தொற்று காலத்தில் வெளி யாதார முறையில் (அவுட்சோர்ஸிங் முறை)  பணிபுரிந்த சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் செவிலியர்களின் அரிய பணி யினை கருத்தில் கொண்டு மாவட்ட சங்கங்க ளின் வாயிலாக தேர்வு நடைபெறும் போது,  கொரோனா பெருந்தொற்று காலத்தில் இவர்கள் பணிபுரிந்தமைக் கான முன்னு ரிமை அளிக்கப்பட்டு கூடுதல் மதிப் பெண்கள் வழங்குவதற்கு வழி செய்யப் பட்டுள்ளது. கொரோனா பெருந்தொற்று காலத்தில் சிறப்பாக பணியாற்றிய செவிலியர் மற்றும்  சுகாதார ஆய்வாளர்கள் இந்த நல்லதொரு வாய்ப்பினை பயன்படுத்தி விண்ணப்பிக்க வும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

;