tamilnadu

img

நாங்க படிச்சாலும் இப்படித்தான் பேப்பர் பொறுக்கணும்! - ஸ்ரீராமுலு

ஆளுநர் மாளிகை, அண்ணா பல்கலைக்கழகம் ஒரு புறம். முதலமைச்சரின் இல்லம் மறு பக்கம். அத்தோடு, போக்குவரத்து மிகுந்த சாலை. அதன் ஒரு ஓரமாக கையில் பாலித்தீன் சாக்குப் பைகளுடனும் அழுக்கான ஆடைகளுடனும் திரிந்து கொண்டிருந்தது ஒரு கும்பல். இவர்களில் பெரும்பாலும் படிப்பறிவு இல்லாதவர்கள். இது நவநாகரீக உலகம் தானா என்று மனது கேள்வியை எழுப்பியது. அடுத்த கணம் அவர்களிடம் பேச்சு கொடுத்தோம்“ சார் நாங்க படிச்சாலும் இப்படி பேப்பர் தான் பொறுக்கனும்”என்று உள்ளம் குமுறினர்.

இவர்கள் யார்? எங்கிருக்கிறார்கள்?

அதன் சந்திப்பிலிருந்து சுமார் 350 மீட்டர் தொலைவில் உள்ளது நரிக்குறவர் காலனி. சுமார் இரண்டு ஏக்கர் பரப்பளவைக் கொண்ட இந்த பகுதி சென்னை மாநக ராட்சிக்கு சொந்தமானது.சைதாப் பேட்டை  சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கோட்டூர் புரத்தில் அமைந்திருக்கிறது. மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனின் தொகுதி இது. அந்த காலனியில் குறுக்கும் நெடுக்கு மாக ஐந்து தெருக்கள் உள்ளதை மாநகராட்சி பெயர்ப் பலகைகள் காட்டுகின்றன. அதன் உள்ளே சென்றதும், இன்னமும் பழமை  மாறாத ஒண்டுக் குடிசைகள், விளம்பரத்தட்டி பலகை பேனர், தார் சீட்டுகளால் டெண்ட்  அடிக்கப்பட்ட கொட்டகைகள். பத்துக்கு பத்து என்கிற அதிகபட்ச அளவில் சிமெண்ட் சீட்டுகளால் தற்காலிக மாக அமைக்கப்பட்ட குடிசைகள் மிக  நெருக்கமாக இருக்கின்றன. ஒரு குடிசை யில் ஐந்தாறு நபர்கள் வசிக்கின்றனர்.

குடிசைகள் தோறும் பெரியவர்கள் முதல்  சிறுவர்கள் வரை கும்பல் கும்பலாக அமர்ந்து  கொண்டுள்ளனர். உள்ளே சென்று பார்த்த தும் ஊசி மணி, பாசிமணி தயாரிப்பு வேலை நடைபெறுகிறது. மழை, வெயிலுக்கு ஒதுங்க  கூட இடம் கிடையாது. பனிக் காற்று, நடுங்கும் குளிர் என்றால் அதோகதி தான். அடிப்படை சுகாதாரம் அறவே பராம ரிக்கப்படாத தெரு முழுமைக்கும்  சாக்கு மூட்டைகள் ஒவ்வொரு குடிசையின் வாசலி லும் குவிந்து கிடக்கின்றன. அதை பழைய பேப்பர் கடையில் போடுவதற்கு தரம் பிரித்துக் கொண்டிருந்தது சிறு கூட்டம். ஆனால் அவை வெறும் குப்பைகள் அல்ல.  தினமும் இரவு-பகல் பாராமல் சாலை ஓரங்களிலும், தெருக்களிலும், டீக்கடை முதல் பெட்டிக் கடை வரைக்கும் சுற்றி திரிந்து சேகரித்த பேப்பர், வாட்டர் கேன், இரும்பு, உடைந்த பிளாஸ்டிக் பொருட்கள். அதுதான் அந்த மக்களின் வாழ்வாதாரம். சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு சுடுகாடு,  ஏரிக்கரை ஓரங்களில் தஞ்சம் அடைந்தி ருந்தது இந்த நரிக்குறவர் சமூகம். அண்ணா  பல்கலைக்கழகம் உருவானதும் அங்கி ருந்து விரட்டப்பட்டனர். நிரந்தர மாக ஒரு இடத்தில் வசிக்க முடியாமல்  அங்கும் இங்குமாக மாறிக்கொண்டே  இருந்துள்ளனர். பிறகு உருவானதுதான்  இந்த நரிக்குறவர் காலனி. இதுவும் நிரந்த ரம் என்று சொல்லிவிட முடியாது. இங்குள்ள மக்கள் பேசுவது பல மொழி களின் கலப்பு என்றாலும் தமிழை அவர்களது பாணியில் சரளமாக பேசுகின்றனர். 

அந்தப் பகுதிக்குள் வெளி நபர் ஒருவர் சென்றாலும் ஒன்று கூடி விடுகிறார்கள். அது  அவர்களது தவறல்ல. அந்த நிலையிலி ருந்து மாற்றிட இந்த சமூகம் முன் வர வில்லை என்பதை தான் அந்த நிகழ்வுகள் எடுத்துக்காட்டுகிறது. படிப்பின் வாசனையே அறியாமல் இருந்த அந்த சமூகத்தில், ஒரே ஒரு பெண் மட்டும் ஜானகி எம்.ஜி.ஆர் கல்லூரியில் பி.காம் பட்டம் பெற்றிருக்கிறார். அவருக்கு அரசு வேலையும் கிடைக்கவில்லை. திரு மணம் செய்து கொண்டு பாசிமணி ஊசி மணி  விற்று வருகிறார். பொறியியல் பட்டத்தை முடித்த அந்த  ஒரே இளைஞருக்கும் அரசு பணி கிடைத்தப்  பாடில்லை. இவருக்கும் திருமணம் ஆகி விட்டது. வேலை இல்லாமல் இப்ப பேப்பர்  பொறுக்கும் தொழிலையே செய்து வரு கிறார். இதற்கெல்லாம் காரணம், ஆண்டாண்டு காலமாக படிப்பறிவே இல்லாத இந்த சமூ கம், மிகவும் பிற்பட்டோர் (எம்பிசி) வகுப்பில்  சேர்க்கப்பட்டுள்ளது. இதன் விளைவு சலுகைகள், அரசின் நல திட்ட உதவிகள் எதுவும் கிடைப்பதில்லை. இதனால், இந்த நரிக்குறவர் மக்களின் வாழ்க்கையில் இன்ன மும் ஒளி வீசவில்லை.

நாங்க செஞ்ச தப்பு என்ன?

எங்க நரிக்குறவங்க படிச்சாலும் கவர்மெண்டு எந்த உதவியும் செய்யல.  ஆனா படிங்க படிங்கன்னு சொல்றதெல்லாம் வேஸ்ட் சார் என்று ஆதங்கப்படும் இளைய  தலைமுறையும் பேப்பர் பொறுக்கும் வேலைக்கு செல்கிறது. அதில் சிலர்,“எங்க அப்பா, அம்மா, ஆயா, தாத்தா யாருமே படிக்கல சார். பேப்பர பொறுக்குனாங்க. நாங்களும் அவங்கள மாதிரி இருக்க விரும்பல. படிக்கவும், வேலைக்கு போகவும் ரெடியா இருக்கி றோம் சார்? குருவிக்காரங்கனு சொன்னதும்  நீங்க சுத்தமா இல்ல, தூரமா தான்  நிக்கணும் சொல்றாங்க சார்.  அது மட்டுமா? ஒரு மாதிரியாகவும் பாக்கு றாங்க. டீக் கடைக்கு கூட போக முடியல.  பொம்பள பொண்ணுங்க பொது பாத்ரூமுக்கு போக முடியல. கேலி, கிண்டல் செய்றாங்க. நாங்க குருவிக்காரர்களா பொறந்தது எங்க தப்பா சார்? இங்குள்ள எல்லாருமே இப்படி இல்ல சார்?  ஒரு சிலருங்க ரொம்பவும் அன்பா  பேசுறாங்க, பழகுறாங்க, நல்லது செய்ய நினைக்கிறாங்க என்றும் கூறினர்.

நிரந்தரமாக ஒரே இடத்தில் வசிக்க ஒரு சென்ட் நிலம் கூட சொந்தமில்லை. இத னால அரசாங்கமும் வீடு கட்டி தர மாட்டேங்  குது.  கடன வாங்கி சொந்தமாக ஒரு மெத்த  வீடு கட்டலாம் நினைச்சா, எப்ப இடிச்சு தள்ளு வங்க, எந்த நேரத்தில் துரத்தி அடிப்பாங்க  என்ற பயத்திலேயே வாழ்ந்து வரு கிறார்கள். அண்டை மாநிலமான ஆந்திராவில் தொடங்கி மகாராஷ்டிரா என்று பல்வேறு மாநிலங்களிலும் பழங்குடியின பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள இந்த நரிக்குறவர் மக்க ளுக்கு அங்கெல்லாம் எஸ்டி சாதிச் சான்று வழங்கப்படுகிறது. இதனால், அரசு வழங்கும் அனைத்து சலுகைகளும் கிடைக்கின்றன. சமூகத்தில் கல்வி அறிவு மிக மிக முக்கிய மாக மாறிவிட்டது. ஆனாலும் இந்த நரிக்குற வர் சமூகத்திற்கு கல்வி என்பது வெகு தூரத்  தில் இருக்கிறது. அறிவியல் தொழில்நுட்பம் வளர்ந்து வரும் இந்த சமூகத்தில், மாற்று  சமூக மக்களுக்கு கிடைக்கும் கொஞ்சநஞ் சம் மரியாதை கூட எங்களுக்கு கிடைப்ப தில்லை என்று உள்ளம் குமுறுகிறார்கள். தமிழ்நாட்டில் பிற சமூகத்தில் வளர்ந்து வரும் பிரிவான எம்பிசி பட்டியலில் உள்ள நரிக்குறவர்களை மற்ற மாநிலங்களைப் போல் பழங்குடியின பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை வெகு கால மாக முன்வைக்கப்படுகிறது. அந்தக் கோரிக்கையை நிறைவேற்ற முன்வராத ஒன்றிய பாஜக அரசு, எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள் என்று மார்தட்டிக் கொள்வதில் அர்த்தமில்லை.

வேட்டையாடுவதையே தொழிலாகக் கொண்டிருந்த நரிக்குறவர் இன மக்களுக்கு அரசு வழங்கிய துப்பாக்கிகள் உரிமத்தை பறித்து விட்டதால் தெருத்தெருவாக அலைந்தாலும், திருவிழாவாக திருவிழா ஓடினாலும் காவல்துறையின் கெடுபிடிகள், சித்திரவதைகளை அனுபவித்து வருகின்ற னர். இதிலிருந்து விடுபட மாற்றுத் தொழிலுக்  கும் உத்தரவாதம் இல்லாமல் அல்லல்படு கின்றனர். படித்த ஒரு சிலருக்கும் வேலைக்கான உத்தரவாதம் இல்லை. சமூகத்தின் அனைத்து அடிப்படை உரிமைகளும் இவர்களுக்கு மறுக்கப்படுகிறது. மிக மோசமான நிலையில் வாழ்ந்து வருகின்றனர். மாமல்லபுரத்திற்கு சுற்றுலா வரும் பயணிகளிடம் ஊசி, பாசிமணி விற்று தொழில்  செய்து வரும் நரிக்குறவர்கள் அருகே உள்ள  பூஞ்சேரி கிராமத்தில் வசித்து வருகிறார்கள். இங்குள்ள நரிக்குறவர் பெண்கள் பெரு மாள் கோவிலில் அன்னதானம் சாப்பிடச் சென்றபோது விரட்டியடிக்கப்பட்டனர். இதில் பாதிக்கப்பட்ட நரிக்குறவர் பெண் அஸ்வினியிபேசிய வீடியோ சமூக வலை தளங்களில் அதிர்வலையை ஏற்படுத்தியது. 

இதனை எடுத்து இந்து சமய அற நிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு சம்பவ இடத்திற்கு சென்று அந்த நரிக்குறவர் பெண்  ணுடன் அதே கோவிலில் அன்னதானம் சாப்பிட்டார். அதன் தொடர்ச்சியாக,பூஞ்சேரி கிராமத்துக்குச் சென்ற முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், நரிக்குறவர் மற்றும் இரு ளர் மக்களுக்கு ரூ.4.53 கோடியில் வீட்டு மனை பட்டாக்கள், குடும்ப அட்டைகள், வாக்காளர் அடையாள அட்டைகள், சாதிச்  சான்று, நல வாரிய அட்டைகள், பயிற்சிக் கான ஆணைகள், வங்கிக் கடனுதவிகள் ஆகியவற்றை வழங்கினார். அந்த நிகழ்வின் போது, நரிக்குற வர்களுக்கு வங்கிக் கடன் வழங்கப்படும், வீடு  கட்டித் தரப்படும், எஸ்டி சாதிச் சான்று கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று  அறிவித்ததோடு உத்தரவு பிறப்பித்தார். ஆனாலும், ஓராண்டை நெருங்கும் நிலை யில் இதுவரை எதுவும் நடக்கவில்லை. வங்கி  அதிகாரிகளும் அரசுத்துறை அதிகாரிகளும் மாறி மாறி பந்தை திருப்பி அனுப்பி வரு கிறார்கள். இதனால் மன வேதனை அடைந்த‌  அஸ்வினி மற்றும் நரிக்குறவர் பெண்கள் சிலரும் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டு  உள்ளனர். அது சமூக வலைதளங்களில் மீண்டும் வைரலாகி வருகிறது. பதறிப் போன  செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத், “பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் கொட்டைப்பாக்கு என்ன விலை?”என்று விளக்கம் கொடுத்திருக்கிறார்.

கோட்டூர்புரம் மட்டுமல்ல, தமிழ்நாடு முழு வதும் பல்வேறு பகுதிகளிலும் வசித்து வரும்  நரிக்குறவர்களுக்கு சொந்தமாக நிலம், பட்டா, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டி யலில் உள்ள மக்களை பழங்குடி இனத்திற்கு மாற்றம் செய்து எஸ்டி சான்று, தொழில்  துவங்குவதற்கு எந்த நிபந்தனையும் இல்லா மல் வங்கிக் கடன் வழங்கவும் முதலமைச்சர் ஸ்டாலின் ஐயா  உடனடியாக நடவடிக்கை வேண்டும் என்பதே இந்த நரிக்குற வர் மக்களின் ஒட்டுமொத்த கோரிக்கை யாகும்.

 

 

;