tamilnadu

img

வேலை உறுதியளிப்பு சட்டம் நகர்ப்புறத்திற்கும் தேவை! கடலூரில் எஸ்.கண்ணன் கோரிக்கை

வேலை உறுதியளிப்பு சட்டம் நகர்ப்புறத்திற்கும் தேவை! கடலூரில் எஸ்.கண்ணன் கோரிக்கை

200 நாள் வேலை + 600 கூலி தருக!  வறுமையை ஒழிக்க 100 நாள் வேலை திட்டத்தை  200 நாட்களாக மாற்றி 600 ரூபாய் கூலி வழங்க வேண்டும். இத்திட்டத்தை நகராட்சி, பேரூராட்சி களுக்கும் விரிவுபடுத்த வேண்டும். அம்பானி-அதானி சொத்து பல மடங்கு! 2014ஆம் ஆண்டு முதல் பிரதமர் மோடியின் ஆட்சியில் அம்பானி, அதானி போன்ற பெருமுதலாளிகளின் சொத்து மதிப்பு பல மடங்கு உயர்ந்துள்ளது. மோடியின் இந்துத்துவா அரசியல் உண்மையில் இந்துக்க ளுக்கானது அல்ல, மாறாக அவர்களை ஏமாற்றி முதலாளிக ளுக்கு சேவை செய்கிறது. மோடியின் கொள்கை வெற்று தம்பட்டம்  அடிக்கும் கொள்கையாகவும், மதவெறியைத் தூண்டுவதாகவும் உள்ளது. 39 நாடுகளுக்கு கோடிகள் - பாதிக்கப்பட்டவர்களுக்கு சொற்பம்! மோடி அரசு 39 நாடுகளுக்கு எம்.பி.க்கள் குழுவை அனுப்பி கோடிக்கணக்கான ரூபாய் செலவு செய்கிறது. அதே நேரத்தில் பாகிஸ்தான் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு சொற்ப இழப்பீடு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. மார்க்சிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் எம்.ஏ. பேபி தலைமையில் எம்.பி.க்கள் குழு காஷ்மீரில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று ஆறுதல் தெரிவித்தது. இதுபோன்ற நடவடிக்கை எடுத்த முதல் கட்சி மார்க்சிஸ்ட் கட்சி. தமிழகத்திற்கான கோரிக்கைகள் Gகாவல்துறையின் அத்துமீறிய நடவடிக்கைகளைக் கட்டுப் படுத்த வேண்டும் G ஜனநாயக போராட்டங்களை அனுமதிக்க வேண்டும் G சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கட்டுப் படுத்த நடவடிக்கை வேண்டும். G பாஜக அரசு தமிழகத்தை மாற்றான் தாய் மனப்பான்மையோடு நடத்துகிறது. அத்தகைய பாஜகவுடன் அதிமுகவின் நட்பு தமிழகத்திற்கு இழைக்கும் துரோகம்.  தொழிலாளர் - விவசாயிகள் கோரிக்கைகளை முன்வைத்து ஜூலை 9ஆம் தேதி நடைபெறும் நாடளாவிய தொழிலாளர் வேலை நிறுத்த போராட்டத்தை வெற்றி பெறச் செய்வோம்!