tamilnadu

img

23 சலுகைகளைப் பறிக்கும் சுற்றறிக்கையை திரும்ப பெறுக!

சென்னை, செப். 13 - அகவிலைப்படி உள்ளிட்ட 23 சலுகைகளைப் பறிக்கும் வாரிய சுற்றறிக்கையை (02/2022) திரும்பப் பெறக்கோரி செவ்வாயன்று (செப்.13)  தமிழகம் முழுவதும் மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பின் (சிஐடியு) 17வது மாநில மாநாடு வெள்ளியன்று ஆக.12 - 14 தேதிகளில் சென்னையில் நடை பெற்றது.  இந்த மாநாடு, நிரந்தர ஊழியர் களின் கோரிக்கைகளை வலியுறுத்தி செப். 13 அன்று மேற்பார்வை பொறி யாளர் அலுவலகங்கள் முன்பு கவன  ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த அறை கூவல் விடுத்தது. இதன்படி, 1.12.2019 முதல் அமல்படுத்த வேண்டிய ஊதிய  ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தை யை உடனே தொடங்கி முடிக்க வேண்டும், மின்துறையை தனியார் மயமாக்கும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும், 58 ஆயிரம் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், 3 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப் பட்டுள்ள சரண்டர் விடுப்பை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னை மத்திய கிளை சார்பில், வள்ளுவர் கோட்டம் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு திட்டத்தலைவர் சீனிவாசன் தலைமை யில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநிலப் பொதுச் செயலாளர் எஸ்.ராஜேந்திரன், துணைப்பொதுச் செய லாளர் ரவிக்குமார், துணைத்தலைவர் ம.தயாளன், மாநிலச் செயலாளர் எஸ்.கண்ணன் உள்ளிட்டோர் பேசி னர். தென்சென்னை கிளை-1 சார்பில் கே.கே.நகர் மேற்பார்வை பொறியார் அலுவலகத்தில் நடைபெற்ற போரா ட்டத்திற்கு கிளைத்தலைவர் வி. விஜயபாஸ்கர் தலைமை தாங்கி னார். மாநிலத் தலைவர் தி.ஜெய்சங் கர், மாநிலச் செயலாளர் இ.விஜய லட்சுமி, கிளைச்செயலாளர் டி.பண்டா ரம்பிள்ளை, பொருளாளர் எஸ்.குமார் உள்ளிட்டோர் பேசினர்.

;