tamilnadu

img

ஜூடோ வீராங்கனையின் வாழ்வில் ஒளி ஏற்றுமா அரசு?

எதிரியை நிலத்தில் வீழ்த்துவது, நகர முடியாமல் இறுகப் பிடிப்பது, திணற  வைத்து பணிய வைப்பது என பல்வேறு நுணுக்கங்களை கொண்ட விளையாட்டு ஜூடா.  ஜூடோ விளையாட்டு போலவே தனது வாழ்க்கையில் எந்த ஒரு எதிர்மறையான செயல்கள் அமைந்தாலும் அதிலும் போராடி வெற்றி பெற்று வருகிறார் தமிழகத்தைச் சேர்ந்த பாரா ஜூடோ வீராங்கனையான மகேஸ்வரி.  இருளிலேயே வாழ்க்கையை கழித்து  வந்தாலும் தன்னம்பிக்கையும் விடாமுயற்சி யும் உணர்வுபூர்வமான முயற்சியும் ஒருவரை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் என்பதற்கு உதாரணமாக இருக்கிறார் மகேஸ்வரி. கார ணம், ஒரு குடும்பத்தில் அனைவருமே பார்வை யை இழந்த மாற்றுத்திறனாளிகள் என்றால் எப்படி இருக்கும் என்று கொஞ்சம் யோசித்து பாருங்கள்.  அத்தகைய குடும்பத்திலிருந்து ஒரு பெண்  விளையாட்டுத் துறையில் தமிழ்நாடு, இந்தியா மட்டுமல்ல உலக அளவில் சாதனை மேல் சாத னை நிகழ்த்தி இருப்பது சாதாரணமானதல்ல.

இருளில் ஒளிர்ந்த வெளிச்சம்...

சென்னைக்கு அருகாமையில் பொன்னேரி யில் வெள்ளி வாயல் சாவடி எனும் கிராமத்தில் அசோக் லேலண்ட் தொழிற்சாலைக்கு பின்புறம் குடிசையில் வசித்து வரும் முருகன்-சாமந்தி இருவருமே பிறவியிலேயே பார்வையை இழந்தவர்கள். இவர்களது மூத்த  மகள் மகேஸ்வரி. இளைய மகள் ராஜேஸ்வரி. மகேஸ்வரிக்கு பார்வை மங்கலாக வெறும் உருவம் மட்டுமே கொஞ்சம் தெரியும். சின்ன  மகளுக்கு வெறும் நிழல் மட்டும் தான் தெரி யும். அதுவும் பகலில் மட்டும். குடும்பத்தில் நான்கு பேருக்குமே பார்வை இல்லை.  55 வயதை கடந்த முருகன் 20 வயதி லிருந்து புறநகர் மின்சார ரயிலில் கடலை மிட்டாய், இஞ்சி மிட்டாய், ரேஷன் கார்டு என சில பொருட்களை விற்பனை செய்து வரு கிறார். இதில் கிடைக்கும் மிக சொற்ப தொகை யை கொண்டு தான் குடும்பத்தை நகர்த்தி வரு கிறார். திருமணத்துக்கு பிறகு மனைவி சாமந்தி யும் முருகனுக்கு துணையாக சென்று இரண்டு மகள்களையும் பட்டப் படிப்பு படிக்க வைத்திருக்கிறார்கள்.

பட்டப்படிப்பு...

திருவள்ளூர் சிறுமலர் பார்வையற்றோர் மேல்நிலைப் பள்ளியில் படிப்பை முடித்த மூத்த மகள் மகேஸ்வரி, சென்னை ராணி மேரி கல்லூரியில் படிப்பை முடித்தார். இளங் கலையில் வரலாறு இரண்டாம் ஆண்டு படிக்கும் போது 2016ஆம் ஆண்டின் ஜூடோ குறித்து தெரிந்து கொண்டுள்ளார்‌. அதில் தீவிர மாக கவனம் செலுத்தியிருக்கிறார். மேலும் பயிற்சிக்காக ஹரியானா சென்று பத்து நாள் முகாமிலும் தங்கி இருக்கிறார். பின்னர் அதையே தொழில்முறை விளையாட்டாக மாற்றிக் கொண்டார். விளையாட்டில் அதிகம் ஆர்வம் ஏற்பட்ட தால் தொடர்ந்து பயிற்சி மேற்கொண்டு உள் ளார். காலை நேர பயிற்சி என்பதால் பயிற்சி க்குப் பின்னரே தாமதமாக உணவு எடுத்துக் கொண்டதால் பல நேரங்களில் உடல் நல பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. குடும்பத்தின் வறுமையும் ஆட்டிப் படைத்திருக்கிறது.

பதக்கங்கள்...

பல்வேறு தடைகளையும் தாண்டி தேசிய  அளவில் ஹரியானா மாநிலத்தில் நடை பெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான ஐந்தாவது ஜூடோ போட்டியில் வெள்ளிப் பதக்கம்வென் றார். இதற்கு அடுத்த ஆண்டு நடைபெற்ற போட்டியில், தங்கப்பதக்கம் வென்றார். மேலும் கோரக்பூரில் நடைபெற்ற தேசிய விளையாட்டுப் போட்டியிலும் தங்கம் வென்று ள்ளார். அதுமட்டுமல்லாமல் சிறந்த விளை யாட்டு வீராங்கனை பட்டத்தையும் வென்று தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்தார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்தோ னேஷியாவில் நடந்த மாற்றுத்திறனாளி களுக்கான ஆசிய விளையாட்டுப் போட்டி யில் ஜூடோ பிரிவில் தங்கப் பதக்கம்வென் றார். அதன் தொடர்ச்சியாக துருக்கி, லக்னோ  என பல்வேறு நாடுகளில் நடந்த சர்வதேச போட்டிகளிலும் பங்கேற்று பதக்கங்கள் குவித்து நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளார்.

தேடி வந்த கவுரவம்...

குடும்பத்தில் உள்ள அனைவரும் பார்வை இழந்தவர்கள் என்பதால் ஆரம்பத்தில் ஒரு வரும் மதித்ததில்லை. ஊருக்கு ஒதுக்குப்புற மாக தள்ளி வைக்கப்பட்டனர். 2018 ஆம் ஆண்டு ‘கோல்ட் மெடல்’ வென்று துருக்கியில் இருந்து  வீடு திரும்பியதும் ஊரே திருவிழா போல் திரண்டு ஓலைக் குடிசைக்கு வந்து பாராட்டு விழா எடுத்து இருக்கிறது. இந்த நிகழ்வால், இதற்கு முன்பு நிகழ்ந்த அவமானங்கள், மன உளைச்சல்கள் அனைத்தையும் சுக்குநூறாக உடைத்திருக்கிறது. மகேஸ்வரியின் திறமையை பாராட்டி திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி ஊக்கத்தொகையாக ஒரு லட்சம் ரூபாய் வழங்கியிருக்கிறார். பசுமை வீடு திட்டத்தில் வீடு  கட்டிக்கொள்ள பயனாளிகள் தேர்வு செய்தும் பேஸ் மட்டம் போடுவதற்கு பணம் இல்லை என்பதால் சொந்த இல்லமும் கானல் நீரானது.

தனது இரண்டு குழந்தைகளுக்கும் கண்  தெரியவில்லை என்றாலும் பள்ளிப் படிப் போடு நிறுத்தாமல் பட்டப்படிப்பு வரை படிக்க வைத்திருக்கிறார் முருகன். மூத்த மகள் மகேஸ் வரி பட்டமேற்படிப்பு முடித்து இருக்கிறார். கோவிட்-19 தொற்று பரவலால் பொதுப் போக்கு வரத்து முடக்கப்பட்டது. இதனால் வியாபாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டு வருமானமின்றி சாப்பாட்டிற்கும் வழியில்லாமல் பரிதவித்து வருகிறது மகேஸ்வரியின் குடும்பம். சில அமைப்புகளும் தனி நபர்களும் அத்தியா வசிய பொருட்களுக்கு உதவி செய்து குடும்பத்தைக் காப்பாற்றி இருக்கிறார்கள்.

முதல்வர் உதவணும்...

சர்வதேச அளவில் இந்தியாவுக்கு பல் வேறு பதக்கங்களை வென்று கொடுத்த பாரா  ஜூடோ வீராங்கனை மகேஸ்வரியின் குடும்பம், வாழ்வாதாரத்தை இழந்து நிர்க்கதியான நிலையில் சாப்பாட்டிற்கும் வழியில்லாமல் வறுமையுடன் போராடி கொண்டிருக்கிறது. விளையாட்டுத் துறையில் பல பதக்கங்கள் பெற்றும் மாநிலத்திற்கு பெருமை சேர்த்தும் பட்டமேற்படிப்பு முடித்த அவரது தகுதிக்கு இதுவரை அரசு வேலை கிடைக்கவில்லை.  தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு, விளையாட்டு வீரர்களுக்கு உரிய அங்கீ காரமும் ஊக்கத் தொகையும் அரசு வேலை யும் வழங்கிவரும் முதல்வர், சீனியர் வீராங்க னையான தனக்கு அரசாங்க வேலை வழங்கி உதவுமாறு கோரிக்கை மனு  அளித்துள்ளார்.  உலக மாற்றுத் திறனாளிகள் தினமான டிசம்பர் 3 ஆம் தேதி மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ள முதல்வர், தனது குடும்பத்தில் ஒருவருக்கு வேலை கொடுப்பார் என்ற நம்பிக்கையில் காத்துக் கொண்டிருக்கிறார். வேலை கிடைத்த தும் மீண்டும் பயிற்சியை துவங்கி அடுத்த பாரா ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு பதக்கம் வென்று கொடுப்பதே தனது லட்சியம் என்கிறார் மகேஸ்வரி. தங்களது உலகம் இருளுக்குள் இருந்தா லும் அதில் ஒரு வெளிச்சத்தை ஜூடோ என்ற விளையாட்டின் மூலம் அடைந்திருக்கும் மகேஸ்வரி, பாரா ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல வாழ்த்துவோம்.

சி.ஸ்ரீராமுலு 

;