சென்னை,டிச.3- தமிழ்நாட்டில் இதுவரை ஒமிக்ரான் பாதிப்பு இல்லை. அப்படி ஒருவேளை யாருக்கும் தொற்று உறுதியானால் அதை அரசு வெளிப்படையாக தெரி விக்கும். அதுவரை யாரும் வதந்தி களை நம்ப வேண்டாம் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கேட்டுக் கொண்டுள்ளார். அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதாரத் துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோர் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது சமூக வலை தளங்களில், தமிழகத்தில் சென்னை, திருச்சி நகரங்களில் ஒமிக்ரான் பரவி யுள்ளதாக வெளியான வதந்திகளை ஒட்டி அமைச்சர் செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம் அளித்தார். மேலும் அவர்கள் கூறியதாவது:- ஒமிக்ரான் தொற்று பரவல் அதிக முள்ள நாடுகளிலிருந்து வருபவர்க ளுக்கு முழுமையாக பரிசோதனை செய்யப்படுகிறது. பரிசோதனை முடிவு வரும்வரை விமான நிலையத்தில் தங்கவைக்கப்படுகிறார்கள். யாருக்கா வது தொற்று உறுதி செய்யப்பட்டால் அரசு மருத்துவமனைகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள சிறப்பு வார்டு களில் அனுமதிக்கப்படுவார்கள்.
மதுரை, திருச்சி, கோவை அரசு மருத்துவமனைகளிலும், சென்னை யில் கிங் ஆய்வகத்திலும், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை, ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனைகளில் சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டு டுள்ளன. ஒவ்வொரு வார்டிலும் தலா 40 படுக்கைகள் தயார் செய்யப்பட் டுள்ளன. ஆக்சிஜன் வசதி உள்ளிட்ட அனைத்தும் தயார் நிலையில் உள்ளன. சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த வருக்கு கொரோனா உறுதியாகி யுள்ளது. அவருடைய ரத்த மாதிரிகளை மரபணு வரிசைப்படுத்துதலுக்காக பெங்களூருவுக்கு அனுப்பியுள்ளோம். பிரிட்டனில் இருந்து சென்னை வந்த 10 வயது சிறுமிக்கும் கொரோனா உறு தியாகியுள்ளது. ஆனால், தமிழகத்தில் இதுவரை ஒமிக்ரான் பாதிப்பு இல்லை. அப்படி ஒருவேளை யாருக்கும் தொற்று உறுதியானால் அதை அரசு வெளிப்படையாக தெரிவிக்கும். அதுவரை யாரும் வதந்திகளை நம்ப வேண்டாம்.
வேலைக்காக வெளிநாடுகளுக்கு சென்று திரும்புவர்களுக்கு பரி சோதனையை இலவசமாக செய்யவும் தென்னாப்பிரிக்கா, இஸ்ரேல் உள் ளிட்ட 11 நாடுகளிலிருந்து திரும்புவர்க ளில் பரிசோதனையை செய்ய முடி யாத பொருளாதார நிலையில் பின்தங்கி யவர்களுக்கும் பரிசோதனையை இலவசமாக செய்யவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். ஒமிக்ரான் குறித்து மக்கள் பீதி யடைய வேண்டாம், மாறாக கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை களைப் பின்பற்றுமாறு தென்னாப்பி ரிக்க மருத்துவர் ஒருவர் கூறியுள்ளார். அதனால் மக்கள் பீதியடைய வேண்டாம். ஆனால், மாஸ்க் அணிவது, கைகளை சுத்தமாக வைத்துக் கொள்வது, தடுப்பூசி செலுத்திக் கொள்வது போன்றவற்றை பின்பற்ற வேண்டும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.