வள்ளலார் நாத்திகர் என்று நிரூபித்தால் ஒரு கோடி ரூபாய் தருவதாக அர்ஜுன் சம்பத் சவால் விட்டிருக்கிறார் . நான் பதில் தருகிறேன். பெரியார் வேதங்களை மறுக்கிறார். எனவே அவரை நாம் நாத்திகர் என்று குறிப்பிடுகிறோம். அதுபோலவே வள்ளலாரும் வேதங்களை மறுக்கிறார்; அதனால் நாம் அவரை நாத்திகர் என்று குறிப்பிடுகிறோம்.எனவே அர்ஜுன் சம்பத் அவர்கள் சவால்விட்ட தொகை ஒரு கோடி ரூபாயை விழா குழுவிற்கு உடனடி யாக வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். பெரியார் வேத ஆகமங்களை மறுத்ததோடு மட்டுமல்லாமல் சாகும் வரை நாத்திகராகவே வாழ்ந்து காட்டி னார். அவர் வழிவந்த கலைஞரும் சமூகநீதிக் கோட்பாடுகளை தூக்கிப்பிடித்தார். அருந்ததியினர் மக்களுக்கு மூன்று சதவிகிதம் உள் இட ஒதுக்கீடு வழங்கியது உட்பட சமூக நீதியை பாதுகாப்பதற்கான ஏற்பாடாகும்.
பெரியார் பார்ப்பனர்களை, ‘பிரா மணியம்’ என்ற குறிப்பிட்ட சொல்லா டல் மூலம் சமூக வெறுப்பை வளர்க்கவே பயன்படுத்தியதாக கூறு கின்றனர். அது சரியல்ல; யாரெல் லாம் பிராமணியக் கோட்பாடுகளை கடைப்பிடிக்கிறார்களோ, அவர்களை மட்டுமே அச்சொல் சுட்டிக் காட்டுகிறது. சமத்துவத்திற்கு எதிராக, சகோதர தத்துவத்திற்கு எதி ராக, சுதந்திரத்திற்கு எதிராக யாரெல் லாம் செயல்படுகிறார்களோ அவர்கள் ‘பிராமணியம்’ என்ற கோட் பாட்டை கடைப்பிடிக்கிறார்கள். எனவே நாம் அவர்களை எதிர்க்க வேண்டிய நிலை உருவாகிறது. பார்க்கக் கூடாத சமூகம், நெருங்கக் கூடாத சமூகம், தொடக் கூடாத சமூகம் என்று ஏற்றத் தாழ்வுள்ள பாகுபாடுகளை உரு வாக்கி மக்களை பிரித்தாளும் சூழ்ச்சி யில் சனாதன அதர்மம் கடைப் பிடிக்கப்பட்டதால் அதை பெரியார் கடுமையாக எதிர்த்தார், விமர் சித்தார். சூரியன் உதயமாவதற்கு முன்னும், சூரியன் மறைந்த பின்னும் தங்களுடைய தேவைகளை முடித்துக் கொள்ள வேண்டும் என்று ஒரு சமூகத்தையே ஒதுக்கி பகலில் நடமாட விடக்கூடாது என்று தீண்டாமையை கடைப் பிடித்ததாலே பெரியார் அக்கொடு மைகளைக் கண்டு எதிர்த்தார்.
நான் ஒரு சனாதனி என்று 1920வாக்கில் தன்னை அறிவித்துக் கொண்டவர் காந்தி. பெரியார் என்ற மகத்தான தலைவரைச் சந்தித்த பின்புதான் அக்கோட்பாடுகளில் இருந்து காந்தி பின் வாங்கினார். வைக்கத்தில் நடைபெற்ற போராட் டம் வெற்றி பெற்றதை அடுத்து போராட்டத்தின் வெற்றி புகழ் பெரியாருக்கு சென்று விடக்கூடாது என்று ராஜாஜி கருதினார். அதற் கான சூழ்ச்சிகரமான வேலைகளை யும் அவர் செய்தார். அதற்கு அவர் காந்தியை பயன்படுத்தினார். பெரி யார் பெருந்தன்மையோடு சொன் னார், “போராட்டத்தின் வெற்றியின் புகழ் யாருக்கு வேண்டுமானாலும் செல்லட்டும். வைக்கம் வீதிகளில் அனைத்து தரப்பினரும் சென்று வரு வார்களானால் அதுவே எனக்கு கிடைத்த மிகப்பெரும் வெற்றி” என்று. பெரியார் வைக்கம் போராட்டத் திற்கு சென்ற போது ராஜாஜி, “நம் தேசத்தில் பல பிரச்சனைகள் இருக்கும் போது நீங்கள் ஏன் பிற தேசத்திற்கு சென்று போராட வேண்டும்” என்று கேள்வி எழுப்பி னார். அதற்கு பெரியார் கூறினார்: “எந்த தேசம் அடிமைப்பட்டுக் கிடக்கிறதோ, எங்கு மக்கள் அடக்கு முறையின் கீழ் அடிமைப்பட்டு கிடக்கிறார்களோ அவர்களுக்காக நான் போராடுவேன், எனக்கு நம் தேசம், பிறதேசம் என்று பாகு பாடெல்லாம் கிடையாது”. கியூபப் புரட்சியாளர் சேகுவேராவைப் போல இப்படி முழங்கினார் பெரியார்.
வைக்கம் போராட்டத்தில் பெரி யார் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்ததை அவரது இணையர் நாக ம்மையிடம் கேட்டபோது, என் கணவர் ஈ.வே.ராமசாமி அவர்கள் இதுபோன்று இன்னும் பல போராட்டங்களை கையில் எடுக்க வேண்டும், அவருக்கு பிரிட்டிஷ் அரசாங்கம் இன்னும் கூடுதலான தண்டனைகள் கொடுத்தாலும் அதை அவர் எதிர்கொள்வார்; அந்த பாக்கியத்தை எங்களுக்கு பிரிட்டிஷ் அரசாங்கம் கொடுக்க வேண் டும் என்று உணர்ச்சி பொங்கக்கூறினார். 1824 இல் வள்ளலார் தோன்றி சனா தனத்திற்கு எதிராகக் குரல்கொடுத்தார். 1924 இல் வைக்கம் போராட்டத் தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான போராட்டத்தை பெரியார் முன்னெ டுத்து வெற்றி கண்டார். 2024 இல் நமக்கான போராட்டத் தை நாம் முன்னெடுத்து இந்தியா நமக் கானது என்பதை உருவாக்க வேண்டும்.
தொகுப்பு : ஆதி.உதயகுமார், நாகப்பட்டினம்.
திருச்சியில் ஆகஸ்ட் 19 அன்று தமுஎகச நடத்திய “வள்ளலார் 200; வைக்கம் 100” கலைவிழாவில் ஆற்றிய உரையிலிருந்து...