tamilnadu

img

பேரூராட்சிகளில் இயக்குநர் திடீர் ஆய்வு

சின்னாளபட்டி,அக்.1-  திண்டுக்கல் மாவட்டத்திற்கு வருகை புரிந்த  பேரூராட்சிகளின் இயக்குனர் செல்வ ராஜ் கன்னிவாடி. ஸ்ரீ ராமபுரம், சித்தையன் கோட்டை, சின்னாளபட்டி  ஆகிய பேரூராட்சி களை திடீர் ஆய்வு மேற்கொண்டார். அங்கு நடைபெறும் பணிகளையும் குறை களையும் கேட்டறிந்தார் .சின்னாளப்பட்டி பேரூ ராட்சி தலைவர் பிரதீபா கனகராஜ், துணைத் தலைவர் ஆனந்தி பாரதிராஜா, செயல் அலு வலர் நந்தகுமார், தலைமை எழுத்தர் கலிய மூர்த்தி, துப்புரவு ஆய்வாளர் கணேசன் ஆகி யோரிடமும்  சித்தையன்கோட்டை பேரூராட்சி யில் தலைவர் போதும் பொண்ணு, செயல் அலு வலர் சிவக்குமார் ,தலைமை எழுத்தர் கரீம் ஆகி யோரிடமும் கன்னிவாடி பேரூராட்சியில் தலை வர் தனலட்சுமி சண்முகம். செயல் அலுவலர் ஜெயமாலு. தலைமை எழுத்தர் முத்துராமன் ஆகி யோரிடமும் ஸ்ரீராமபுரம் பேரூராட்சியில் தலை வர் சகிலா ராஜா .செயல் அலுவலர் விஜயா, தலைமை எழுத்தர்  துரைப்பாண்டியன் ஆகியோ ரிடமும் குறைகளையும் அங்கு நடைபெறும் வளர்ச்சி திட்ட பணிகளையும் கேட்டறிந்தார் . பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் மனோ ரஞ்சிதம் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் உடனிருந்தனர்.