கொரோனா ஊரடங்கில் வாழ்வாதாரம் இழந்த மக்களுக்கு ரூ.7,500 வழங்கவேண்டும், ரேசன் கடைகளில் அனைத்துப் பொருட்களையும் இலவசமாக வழங்கவேண்டுமென்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் மதுரை கீழக்குடியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்டக்குழு உறுப்பினர் ஆர்.ராமகிருஷ்ணன், பொன்.கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.