tamilnadu

img

தருமபுரம் ஆதீனத்தின் பட்டினப் பிரவேச நிகழ்வை தடை செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்

தருமபுரம் ஆதீனத்தின் பட்டினப் பிரவேச நிகழ்வை  தடை செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்

மனிதரை மனிதர் பல்லக்கில் சுமப்பதை ஏற்க முடியாது

மயிலாடுதுறை, மே 19-  தருமபுரம் ஆதீனத்தை பல்லக்கில் தூக்கிக் கொண்டு செல்லும் நிகழ்வை தடை செய்ய  வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி, விசிக, திவிக உள்ளிட்ட  கட்சியினர் திங்களன்று மாலை மயிலாடுதுறை மாவட்டம் கிட்டப்பா  அங்காடி முன்பு கண்டன ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர்.  மயிலாடுதுறையில் 600 ஆண்டுகள்  பழமைவாய்ந்த தருமபுரம் ஆதீனம் உள்ளது. இதன் மடாதிபதியாக 27  ஆவது சந்நிதானமாக மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியர் என்பவர் பதவி வகிக்கிறார். அவரை  பல்லக்கில் அமர வைத்து பக்தர்கள்  சுமந்து, ஆதீன மடத்தின் நான்கு வீதி களை சுற்றி வரும் நிகழ்வை தடை செய்யக்கோரியும், மனிதனை மனி தனே சுமப்பதற்கு எதிர்ப்பு தெரிவித் தும், அந்நிகழ்வை தடை செய்ய வலி யுறுத்தியும் மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விடுதலை சிறுத்தைகள் கட்சி  மாவட்டச் செயலாளர் சிவ.மோகன் குமார் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற் குழு உறுப்பினர் ஜி.ஸ்டாலின், திரா விடர் விடுதலை கழக மாவட்டச் செயலாளர் தெ.மகேஷ் , தமிழ் மண் தன்னுரிமை இயக்க நெறியாளர் பேராசிரியர் த.ஜெயராமன், தமிழர் தேசிய முன்னணி மாவட்டச் செய லாளர் பேராசிரியர் இரா. முரளி தரன், தமிழர் உரிமை இயக்க அமைப்பாளர் சுப்பு மகேசு உள்ளிட்ட  30-க்கும் மேற்பட்ட அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டு, பட்டினப் பிரவேச நிகழ்வை தடை செய்ய வலியுறுத்தி, கண்டன முழக் கங்களை எழுப்பினர்.