tamilnadu

img

நாட்டைக் காப்பாற்ற நடைபெறும் தேர்தலில் மோடி-எடப்பாடியை தோற்கடியுங்கள்

மதுரை, ஏப்.13-சாதி, மதரீதியாக மக்களைப் பிளவுபடுத்தத் துடிக்கும் மோடி அரசை வாக்காளர்கள் தோற்கடிக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினரும் மாநிலங்களவை உறுப்பினருமான டி.கே.ரங்கராஜன் கூறினார்.திமுக தலைமையிலான மதச்சார் பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில் மதுரை தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிவேட்பாளர் சு.வெங்கடேசனை ஆதரித்து சம்மட்டிபுரத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் டி.கே.ரங்கராஜன் பேசியதாவது:-நாட்டைக் காப்பாற்ற, அரசியல் சட்டத்தைக் காப்பாற்ற நடைபெற உள்ளதேர்தலில் தமிழக வாக்காளர்கள் மோடிஅரசையும் அவர்களுக்கு துணைபோகும் எடப்பாடி அரசையும் தோற்கடிக்க வேண்டும்தமிழக முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் லேடியா? மோடியா? என பிரச்சாரம் செய்தார். மோடியை தமிழக மக்கள் நிராகரித்தனர். அந்த மோடியிடம் முதல்வர் எடப்பாடி அரசு சரணாகதி அடைந்துவிட்டது. காலில் விழும் கலாச்சாரம் ஜெயலலிதாவோடு முடிந்துவிட்டது என நினைத்தால் அது இன்றும்தொடர்கிறது. மோடியின் காலில் தேனிமக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத் குமார் காலில் விழுந் துள்ளார். மதுரை தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜ் சத்தியனும் காலில் விழுந்ததாக கூறப்படுகிறது. இவர்கள் எப்படி மக்கள் கோரிக்கைக்காக குரல்கொடுப்பார்கள்.நீட் தேர்வில் தமிழக மக்களை வஞ்சித்த, நீட் தேர்வு தேவையில்லை என்ற சட்டத்தை அங்கீகரிக்க மறுத்தமோடியுடன் எடப்பாடி கூட்டு சேர்ந்துள்ளார்.


மதுரை நகரம் இன்னும் பழமையானதாகவே இருக்கிறது. போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கிறது. புதியவேலைவாய்ப்புகளும் இங்கில்லை. தொழிற்சாலைகளும் புதிதாக திறக்கப் படவில்லை. இருந்த பஞ்சாலைகளும் மூடப்பட்டுவிட்டன. விருதுநகரில் ஐந்து லட்சம் பட்டாசுத் தொழிலாளர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ளது. திருப்பூரில் பனியன் தொழிலும், கோயம்புத்தூரில் இன்ஜினியரிங் தொழிலும் முடங்கிவிட்டது. திருச்சிராப்பள்ளியில் பிஎச்இஎல் நிறுவனத்தை நம்பியிருந்த சிறு-குறு தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். கல்வியிலும், தொழில் வளர்ச்சியிலும் தமிழகம் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது. எடப்பாடி அரசில் லஞ்சம்-லாவன்யம் நிறைந்துள்ளது. அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்களில் பலர் சட்டமன்ற உறுப்பினர்களாக இருப்பதே லாபம் என நினைக்கின்றனர். அதற்குக் காரணம் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள்தினகரன் அணியின் பக்கம் சென்றுவிடாமல் இருக்க மாதம் ரூ.10 லட்சம் வரை சம்பளமாக எடப்பாடி கொடுத்ததாக கூறப்படுகிறதுவருடத்திற்கு இரண்டு கோடிப் பேருக்கு வேலை தருவேன் என்றார்மோடி. ஆனால் அவர் அதைச் செய்யவில்லை. மாறாக படித்தவர்களை பகோடா வியாபாரம் செய்யுங்கள் என்கிறார். பகோடா விற்பது ஒன்றும் கேவலமானதல்ல. அது வேலையல்ல வியாபாரம். இளைஞர்கள் கேட்பதோ வேலை. வேலைக்கும் வியாபாரத்திற் கும் மோடிக்கு வித்தியாசம் தெரியாமல் ஏட்டிக்குப் போட்டியாகப் பேசுகிறார்.தமிழகத்திற்கு புதிய முதலீடுகளைக் கொண்டுவருவதில் மோடி அரசு அக்கறைகாட்டவில்லை. அவர் குஜராத்திற்கு மட்டுமே பிரதமராக இருந்துள்ளார். அம்பானிகளும் அதானிகளும் தான் அவரால் பலனடைந்துள்ளனர்.மோடி அரசு ஒன்றும் ஊழலில்லாதஅரசு இல்லை. அனைத்து இலாக்காகளிலும் ஊழல் உள்ளது. அமைச்சர்கள் வசூல் செய்துகொள்ள அவர்களுக்கு ‘‘கோட்டா’’ நிர்ணயிக்கப்பட்டுள்ளது.மதுரையின் குரல் நாடாளுமன்றத் தில் ஒலிக்க சு.வெங்கடேசனை வெற்றிபெறச் செய்யுங்கள்.இவ்வாறு டி.கே.ரங்கராஜன் பேசினார்.கூட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 20-ஆவது வார்டு பொறுப்பாளர் வீரமணி தலைமை வகித்தார். ஒச்சுபாலு, ஆர்.கணேசன், ஒ.வேல்முருகன், சுசி செல்வராஜ் (திமுக), எஸ்.பி.கண்ணன் (மதிமுக), வேல்முருகன் (காங்கிரஸ்). மு.ஜெயம்பெருமாள், மா.கருப்பையா (திராவிட தமிழர் இயக்கப் பேரவை) உள்ளிட்ட கூட்டணிக்கட்சி நிர்வாகிகள் பேசினர்.

;