மேகாலயா சுரங்க வெடிவிபத்து பலி எண்ணிக்கை 30ஆக உயர்வு
மேகாலயா மாநிலம் கிழக்கு ஜெயந்தியா மலை மாவட்டத்தின் தாங்ஸ்கை என்ற இடத்தில் உள்ள சட்டவிரோத எலிவளை நிலக்கரி சுரங்கத்தில் பிப்., 5 அன்று பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த வெடிவிபத்தில் சிக்கி படுகாயமடைந்து அசாம் மாநிலம் சில்ச்சாரில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 2 தொழிலாளர்கள் செவ்வாய்க்கிழமை அன்று அடுத்தடுத்து உயிரிழந்தனர். இதன்மூலம் சுரங்க விபத்தில் உயிரிழந்தவர்களின் மொத்த எண் ணிக்கை 30ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்களில் பெரும்பாலா னோர் அசாம், மேகாலயா மற்றும் நேபாளத்தைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் எனத் தெரியவந்துள்ளது. இந்நிலையில், சட்டவிரோத சுரங்கங்களைத் தடுக்கத் தவறியதற்காக கிழக்கு ஜெயந்தியா மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளருக்கு மேகா லயா உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், 10 நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து விபத்து குறித்து விரிவான விசாரணை நடத்த மேகாலயா பாஜக கூட்டணி அரசு நீதி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
