சிபிஎம் எம்.பி., ஜான் பிரிட்டாஸ்
பிஎம் கேர்ஸ் நிதி குறித்து கேள்வி கேட்க அதிகாரம் இல்லை என்று பிரதமரின் அலுவலகம் கூறுகிறது. உண்மையில் நிதியம் இந்திய அரசால் நிறுவப்பட்டது என்றால், அதைப் பற்றி கேள்வி கேட்கும் உரிமை நாடாளுமன்றத்திற்கும் உண்டு : நாட்டு மக்களுக்கும் உண்டு.
திமுக எம்.பி., கனிமொழி சோமு
2014இல் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.410 ஆக இருந்தது. தற்போது ரூ.853 ஆக உள்ளது. இப்படி பெட்ரோல், டீசல் உள்ளிட்ட அடிப்படை, அத்தியாவசியப் பயன்பாட்டுப் பொருட்களின் விலை விண்ணைத்தொடும் உச்சத்தை கடந்த 12 ஆண்டுகளில் எட்டியுள்ளது. அதுமட்டு மல்லாது சில பொருட்களின் விலை எளிய மக்களின் கைக்கே எட்டாத அளவிற்கு அதிகரித்துள்ளது.
இந்திய கிரிக்கெட் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி
இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டிகள் எப்போதுமே விறுவிறுப்பாக இருக்கும். ஆனால், சில ஆண்டுகளாக அந்த விறுவிறுப்பை காணவில்லை. பலமான இந்தியாவை வீழ்த்துவது எளிதாக இருக்காது என்பதால், இம்முறை பாகிஸ்தான் அணி நன்றாக விளையாடும் என நம்புகிறேன்.
ராஷ்டிர விரோதியன் பேலயி தளம்
பாஜகவின் தேசியத் தலைவர் வருவதற்கு கோடிக்கணக்கில் செலவு செய்யப்படுகிறது. ஆனால் சாக்கடைகளைச் சுத்தம் செய்வது மற்றும் வடிகால் அமைப்புகளை அமைப்பது பற்றிப் பேச்சு வரும்போது மட்டும் பட்ஜெட் பற்றாக்குறை ஏற்பட்டுவிடுகிறது என பீகார் பாஜக அரசு மழுப்புகிறது.
