இராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் வியாழக்கிழமை மாலை பலத்த சூறைக்காற்றால் விசைப்படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. சுமார் பத்து படகுகள் வரை சேதமாகியிருப்பதாக சக மீனவர்கள் தெரிவித்துள்ளதாக பாம்பன் பகுதி மீனவர் ஜெரோமியன் நமது செய்தியாளரிடம் தெரிவித்தார். மழையும்-காற்றும் தொடர்வதால் வெள்ளிக்கிழமை காலை தான் படகுகளின் சேதத்தை மதிப்பீடு செய்ய இயலும் என்றும் அவர் கூறினார்.